ADDED : ஜூன் 11, 2025 08:11 AM
பெங்களூரு : சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை:
கர்நாடகாவில் கொரோனா தொற்றுக்கு, நேற்று இருவர் உயிரிழந்தனர். இத்துடன் இறப்பு எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. நேற்று புதிதாக 67 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை நோயாளிகள் எண்ணிக்கை, 1,287 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் நேற்று, 571 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில் 67 பேருக்கு கொரோனா உறுதியானது. 453 பேர் வீட்டிலும், ஆறு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
தொற்றை கட்டுக்குள் கொண்டு வர, சுகாதாரத்துறை அனைத்து நடவடிக்கையும் எடுத்துள்ளது. மக்கள் கலக்கம் அடைய தேவையில்லை. ஆனால் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். சுகாதாரத் துறையின் உத்தரவுகளை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.