/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கருடா வாகனத்தில் ரோந்து; ஏ.எஸ்.ஐ.,க்களுக்கு துப்பாக்கி கருடா வாகனத்தில் ரோந்து; ஏ.எஸ்.ஐ.,க்களுக்கு துப்பாக்கி
கருடா வாகனத்தில் ரோந்து; ஏ.எஸ்.ஐ.,க்களுக்கு துப்பாக்கி
கருடா வாகனத்தில் ரோந்து; ஏ.எஸ்.ஐ.,க்களுக்கு துப்பாக்கி
கருடா வாகனத்தில் ரோந்து; ஏ.எஸ்.ஐ.,க்களுக்கு துப்பாக்கி
ADDED : மார் 25, 2025 02:56 AM

மைசூரு : 'கருடா' வாகனத்தில் ரோந்து செல்லும் ஏ.எஸ்.ஐ.,க்களுக்கு துப்பாக்கி வழங்கப்பட உள்ளதால், அவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மைசூரு நகரில் 'கருடா' வாகனத்தில் இரவு நேரத்தில் ஏ.எஸ்.ஐ.,கள் ரோந்து செல்கின்றனர். ஆனால் இவர்களிடம் குற்றத்தை தடுக்கவும், தங்களை குற்றவாளிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ளவும் துப்பாக்கி வழங்கப்படவில்லை.
இந்நிலையில், நகர போலீஸ் கமிஷனரகம், சட்டம் - ஒழுங்கை காப்பாற்றும் வகையில், 'கருடா' வாகனத்தில் செல்லும் ஏ.எஸ்.ஐ.,க்களுக்கும் துப்பாக்கிகள் வழங்க உத்தரவிட்டுள்ளது.
மைசூரு நகரில், 140 ஏ.எஸ்.ஐ., அதிகாரிகள் உள்ளனர். இவர்களுக்கு கடந்த வாரத்தில் இருந்து மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் பணி நேரம் முடியும் வரை, துப்பாக்கியை அவர்கள் வைத்த இருக்க வேண்டும்.
மைசூரு நகர போலீஸ் கமிஷனர் சீமா லட்கர் கூறுகையில், ''ரோந்து பணியில் ஈடுபடும் ஏ.எஸ்.ஐ.,கள் இனி துப்பாக்கியை கொண்டு செல்ல வேண்டும். போலீஸ் விதிமுறையின் கீழ், அவர்களுக்கு வழங்கப்படுகிறது. துப்பாக்கியை பயன்படுத்த இவர்களுக்கு முறையான பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.
நகரில் கலவரம், போதை பொருள் கடத்தல், குற்றச்சம்பவங்கள் ஏற்படாமல் தடுப்பதற்காக ஏ.எஸ்.ஐ.,க்களுக்கு துப்பாக்கி அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.