/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பா.ஜ.,வில் பிரச்னை உள்ளது அரவிந்த் லிம்பாவளி ஒப்புதல் பா.ஜ.,வில் பிரச்னை உள்ளது அரவிந்த் லிம்பாவளி ஒப்புதல்
பா.ஜ.,வில் பிரச்னை உள்ளது அரவிந்த் லிம்பாவளி ஒப்புதல்
பா.ஜ.,வில் பிரச்னை உள்ளது அரவிந்த் லிம்பாவளி ஒப்புதல்
பா.ஜ.,வில் பிரச்னை உள்ளது அரவிந்த் லிம்பாவளி ஒப்புதல்
ADDED : ஜூன் 29, 2025 11:04 PM

பெங்களூரு: ''கர்நாடக பா.ஜ.,வில் பிரச்னை இருப்பது உண்மை தான்,'' என்று, முன்னாள் அமைச்சர் அரவிந்த் லிம்பாவளி ஒப்புக் கொண்டுள்ளார்.
கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திராவுக்கு எதிராக உருவாகி உள்ள அணியில், தலித் சமூகத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அரவிந்த் லிம்பாவளியும் உள்ளார். இந்நிலையில் கடந்த 27ம் தேதி மல்லேஸ்வரம் பா.ஜ., - எம்.எல்.ஏ., அஸ்வத் நாராயணா வீட்டில் நடந்த, பா.ஜ., தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் அரவிந்த் லிம்பாவளியும் கலந்து கொண்டார்.
இதுகுறித்து பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடக பா.ஜ.,வில் பிரச்னை இருப்பது உண்மை தான். பா.ஜ., தேசிய கட்சி. இரண்டு முறை ஆட்சி அமைத்து உள்ளது. பெரிய கட்சியில் இயற்கையாகவே எப்போதும் பிரச்னை இருக்க தான் செய்யும். அதனை தீர்க்கும் நோக்கில் ஆலோசனைகள் நடக்கின்றன.
எங்களுக்கு ஆலோசனை வழங்க கூடிய மூத்த தலைவர்கள் பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்.,சில் உள்ளனர். அவர்கள் சொல்படி நடந்து கொள்வோம். அஸ்வத் நாராயணா வீட்டில் நடந்த ஆலோசனையில் பல பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதுபற்றி வெளிப்படையாக சொல்ல முடியாது. எனக்கும், விஜயேந்திராவுக்கும் இடையில் சமரசம் ஏற்படுத்த எந்த முயற்சியும் நடக்கவில்லை. இது ஊடகங்கள் உருவாக்கிய கற்பனை கதை.
இவ்வாறு அவர் கூறினார்.