/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கழுத்தறுத்து நாயை கொன்ற பெண் உயிர் பிழைக்க பூஜை செய்தது அம்பலம் கழுத்தறுத்து நாயை கொன்ற பெண் உயிர் பிழைக்க பூஜை செய்தது அம்பலம்
கழுத்தறுத்து நாயை கொன்ற பெண் உயிர் பிழைக்க பூஜை செய்தது அம்பலம்
கழுத்தறுத்து நாயை கொன்ற பெண் உயிர் பிழைக்க பூஜை செய்தது அம்பலம்
கழுத்தறுத்து நாயை கொன்ற பெண் உயிர் பிழைக்க பூஜை செய்தது அம்பலம்
ADDED : ஜூன் 29, 2025 11:04 PM

மஹாதேவபுரா: கழுத்து அறுத்து நாயை கொன்ற பெண், நாய் மீண்டும் உயிர் பிழைக்க, சாமி படத்திற்கு பூஜை செய்தது அம்பலமாகி உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் திரிபர்ணா, 40. பெங்களூரில் ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்கிறார். மஹாதேவபுரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின், நான்காவது மாடியில் உள்ள வீட்டில் தனியாக வசித்தார். நேற்று முன்தினம் இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.
போலீசார் சென்று பார்த்த போது, அழுகிய நிலையில் நாய் உடல் மீட்கப்பட்டது. நாயின் கழுத்தை அறுத்து திரிபர்ணா கொன்றது தெரிந்தது. மாநகராட்சியின் கால்நடை அதிகாரி ருத்ரேஷ் குமார் அளித்த புகாரில், திரிபர்ணா மீது வழக்கு பதிவாகி உள்ளது. இந்நிலையில் மஹாதேவபுரா போலீசார் நடத்திய விசாரணையில், பரபரப்பு தகவல் வெளியானது.
வெறுப்பு
திருமணம் ஆகாத திரிபர்ணா, அடுக்குமாடி குடியிருப்பில், தனியாக வசித்து உள்ளார். சில ஆண்டுக்கு முன்பு சொந்தமாக, ஒரு நிறுவனத்தை துவங்கி அதில் நஷ்டம் அடைந்தார். அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போரிடம் கூட, திரிபர்ணா பேசுவது இல்லை. தனிமையாக இருப்பதை உணர்ந்த அவர், லாப்டரார் இனத்தை சேர்ந்த நான்கு நாய்களை வீட்டில் வளர்த்தார்.
நான்கு நாய்களும் இரவில் குரைத்து கொண்டே இருந்தது, பக்கத்து வீட்டினருக்கு இடைஞ்சல் ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி மாநகராட்சியின் கால்நடை அதிகாரிகளுக்கு புகார் சென்று உள்ளது.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன், திரிபர்ணா வீட்டிற்கு சென்ற அதிகாரிகள், நாய்களால் யாருக்கும் தொந்தரவு ஏற்படாமல் பார்த்து கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறி உள்ளனர். அதில் இருந்தே நாய்கள் மீது, திரிபர்ணாவுக்கு வெறுப்பு ஏற்பட்டு உள்ளது. நாய்களுக்கு சாப்பாடு கொடுக்காமல் அடித்து துன்புறுத்தி வந்து உள்ளார்.
மீண்டும் உயிர்
தனியாக வசிப்பது, அலுவலகத்தில் பணிச்சுமை காரணமாக அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டு உள்ளது.
கடந்த மாதம் நான்கு நாய்களில், ஒரு நாய் திடீரென காணாமல் போனது. இது அவருக்கு மேலும் மன அழுத்தத்தை அதிகரித்து உள்ளது. இந்நிலையில் தான் நான்கு நாட்களுக்கு முன்பு, மூன்று நாய்களில் ஒரு நாயை, கழுத்தை அறுத்து கொன்று உள்ளார்.
நாய் இறந்ததும் கண்ணீர் விட்டு அழுத திரிபர்ணா, நாயின் உடலை எடுத்து சென்று, சாமி படத்தின் முன்பு வைத்து, நாய் மீண்டும் உயிர் பிழைக்க வேண்டும் என்று பூஜை செய்ததும் அம்பலமாகி உள்ளது. மன அழுத்தம் காரணமாக திரிபர்ணா மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும், போலீசார் தெரிவித்து உள்ளனர்.