/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நாய்க்கடியால் மாதந்தோறும் 40,000 பேர் பாதிப்பு நாய்க்கடியால் மாதந்தோறும் 40,000 பேர் பாதிப்பு
நாய்க்கடியால் மாதந்தோறும் 40,000 பேர் பாதிப்பு
நாய்க்கடியால் மாதந்தோறும் 40,000 பேர் பாதிப்பு
நாய்க்கடியால் மாதந்தோறும் 40,000 பேர் பாதிப்பு
ADDED : மே 30, 2025 11:32 PM
பெங்களூரு: கர்நாடகாவில் மாதந்தோறும், 40,000 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்படுகின்றனர் என, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை:
சுகாதாரத்துறையின் ஒருங்கிணைந்த சுகாதாரத்துறை தகவல் தளம் என்ற வலைதளத்தின் தகவல்களின்படி, கர்நாடகாவில் மாதந்தோறும் 40,000 பேர் நாய்க்கடிக்கு ஆளாகின்றனர். நாய்க்கடி சம்பவங்கள் அதிகரிக்கின்றன.
நாய் கடித்தால் உயிரை காப்பாற்றும், ஆன்டி ரேபிஸ் தடுப்பூசி உள்ளிட்ட மருந்துகள் இருப்புள்ளன. மூன்று மாதங்களுக்கு தேவையான மருந்து உள்ளது. இது காலியானால் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என, அஞ்சுகிறோம்.
கர்நாடகாவின் அனைத்து மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்களை கே.எஸ்.எம்.எஸ்.எல்., ஏஜென்சி சப்ளை செய்கிறது.
இந்த மருந்துகளின் பட்டியலில், ரேபிஸ் தடுப்பூசி, இம்யுனோகுளோபலின் சேர்க்கப்பட்டுள்ளன. விரைவில் மருந்துகள் சப்ளையாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.