Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 17 மணி நேரம் பூங்கா திறப்பதால் என்ன பயன்? பெங்களூரு பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கேள்வி

17 மணி நேரம் பூங்கா திறப்பதால் என்ன பயன்? பெங்களூரு பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கேள்வி

17 மணி நேரம் பூங்கா திறப்பதால் என்ன பயன்? பெங்களூரு பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கேள்வி

17 மணி நேரம் பூங்கா திறப்பதால் என்ன பயன்? பெங்களூரு பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கேள்வி

ADDED : ஆக 07, 2024 06:06 AM


Google News
பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பூங்காக்களில் பழைய விதிமுறையை அமல்படுத்த, மாநகராட்சி கமிஷனரிடம், பெங்களூரு பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், மனு கொடுத்து உள்ளனர்.

பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்டு 1,200க்கும் மேற்பட்ட பூங்காக்கள் உள்ளன. இவை தினமும் அதிகாலை 5:00 மணி முதல் 10:00 மணி வரையிலும்; மீண்டும் மதியம் 1:30 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலும் திறக்கப்பட்டு வந்தது.

'பொது மக்களிடம் இருந்து வந்த வேண்டுகோளை ஏற்று, தோட்டக்கலை துறைக்கு உட்பட்ட லால்பாக், கப்பன் பூங்காவை தவிர மற்ற பூங்காக்கள் தினமும் அதிகாலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை என தொடர்ந்து 17 மணி நேரம் திறந்திருக்கும் என துணை முதல்வர் சிவகுமார் அறிவித்திருந்தார்.

பாதுகாப்பு சிக்கல்


இந்நிலையில், பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத்திடம், ஜெயநகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., ராமமூர்த்தி தலைமையில் பெங்களூரு பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் குழுவினர், நேற்று முன்தினம் மனு அளித்தனர்.

அதில் குறிப்பிட்டு உள்ளதாவது:

பூங்காக்கள் அதிக நேரம் திறந்து வைப்பதால், சமூக விரோத சக்திகளுக்கு இடம் கொடுத்தது போன்றதாகி விடும்.

பல பூங்காக்களில் பணியாளர்கள், கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால், பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படும்.

இத்துடன் தொடர்ந்து 17 மணி நேரம் திறந்து வைப்பதால், மூன்று ஷிப்ட்களில் ஊழியர்கள் பணியாற்ற நேரிடும்.

எனவே, பழையவிதிமுறைகள் போன்று காலை மற்றும் மாலையில் மட்டும் திறக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

ஜெயநகர் எம்.எல்.ஏ., ராமமூர்த்தி கூறுகையில், ''காலை 5:00 மணி முதல் 10:00 மணி வரையிலும்; மாலையில் 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை என பழைய விதிமுறையையே அமல்படுத்துமாறு கூறி உள்ளோம். இதன் மூலம், பிற்பகல் பூங்காக்களை பரமாரிக்க நேரம் இருக்கும்.

பராமரிப்பு


''புதிய விதிமுறையால், பூங்காவை பராமரிக்கும் ஒப்பந்ததாரருக்கு 24 மணி நேர வேலையாக மாறிவிடும். தற்போதைய டெண்டர் நிபந்தனை, ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள தொகை ஆகியவை, பரமாரிப்பு பணிகள் மேற்கொள்ள தடையாக இருக்கும். இதனால் அவர்களுக்கு நஷ்டம் ஏற்படும். அதே நேரத்தில், பூங்காக்களை தொடர்ந்து பராமரிப்பதுடன், பாதுகாப்பிலும் சிக்கல் ஏற்படும்,'' என்றார்.

மஹாலட்சுமி லே - அவுட் எம்.எல்.ஏ., கோபாலய்யா கூறியதாவது:

நாள் முழுதும் பூங்கா திறந்திருந்தால், துாய்மை, பரமாரிப்பு கூடுதல் சுமையாக மாறும். என் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 53 பூங்காக்கள் உள்ளன.

இதில், டாக்டர் சிவகுமார சுவாமிகள் பூங்கா, கெம்பே கவுடா பூங்கா, நவநந்தினி பூங்கா, சுவாமி விவேகானந்தா பூங்கா, டாக்டர் பாலகங்காதரநாத சுவாமிகள் பூங்கா ஆகியவை பராமரிப்புக்கு ஒரு ரூபாய் கூட கிடைப்பதில்லை.

கூடுதல் நிதி


அரசு கொடுக்கும் 10 கோடி ரூபாய், உரம், தண்ணீருக்கு மட்டுமே தவிர, வழக்கமான பராமரிப்புக்காக அல்ல. பூங்கா நேரத்தை மாற்றுவதற்கு பதில், பசுமையான பூங்காவை பராமரிக்க, அரசு கூடுதல் நிதி தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us