/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/மார்ச் 22ல் சென்னையில் கூட்டம்: சித்தராமையா பங்கேற்கவில்லைமார்ச் 22ல் சென்னையில் கூட்டம்: சித்தராமையா பங்கேற்கவில்லை
மார்ச் 22ல் சென்னையில் கூட்டம்: சித்தராமையா பங்கேற்கவில்லை
மார்ச் 22ல் சென்னையில் கூட்டம்: சித்தராமையா பங்கேற்கவில்லை
மார்ச் 22ல் சென்னையில் கூட்டம்: சித்தராமையா பங்கேற்கவில்லை
ADDED : மார் 13, 2025 09:26 PM

பெங்களூரு: லோக்சபா தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக மார்ச் 22ல் சென்னையில் நடக்க உள்ள கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில், பங்கேற்கவில்லை என அறிவித்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, தனக்கு பதில் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கலந்து கொள்வார் எனக்கூறியுள்ளார்.
லோக்சபா தொகுதி மறுவரையறை, மும்மொழிக் கொள்கை, மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வு குறைவு உள்ளிட்ட விவகாரங்களை தேசிய அளவில் எடுத்து செல்வதற்கு, தென் மாநில முதல்வர்கள் மற்றும் கட்சித் தலைவர்களை இணைத்து, கூட்டு நடவடிக்கை குழு அமைத்து, அடுத்தகட்ட நடவடிக்கையை தொடர, சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக, தென் மாநில முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதன் தொடர்ச்சியாக, பிற மாநில முதல்வர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து, கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்திற்கு அழைக்க, அமைச்சர்கள், எம்.பி.,க்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று, பெங்களூரு சென்ற அமைச்சர் பொன்முடி தலைமையிலான குழுவினர், கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோரை சந்தித்து ஸ்டாலினின் கடிதத்தை அளித்தனர்.
இந்நிலையில், ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் சித்தராமையா கூறியுள்ளதாவது: உங்களின் கடிதம் கிடைக்கப்பெற்றேன். இது நமது அரசியலை நிர்வகிக்கும் கொள்கைகளில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் மாநிலங்களின் சுயாட்சி பற்றிய மிக முக்கியமான பிரச்னைகளை எழுப்புகிறது. குறிப்பாக மக்கள் தொகை அடிப்படையில், லோக்சபா மற்றும் சட்டசபை தொகுதிகள் மறுவரையறை விஷயம். இந்த விஷயம் குறித்த ஒரே எண்ணம் கொண்ட மாநிலங்கள் விரிவாக விவாதிக்க வேண்டும். இந்த கூட்டத்தில் பங்கேற்க நான் விரும்பினாலும் முன்னரே ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகள் காரணமாக என்னால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.
இருப்பினும், 22ம் தேதி நடக்கும் இந்த கூட்டத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரரை கேட்டுக் கொண்டு உள்ளேன். இவ்வாறு அந்த கடிதத்தில் சித்தராமையா கூறியுள்ளார்.