/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மோடி...ஜெய் ஸ்ரீராம்...பாரத் மாதா கீ ஜே! பெங்களூரு பா.ஜ., அலுவலகத்தில் உற்சாகம் மோடி...ஜெய் ஸ்ரீராம்...பாரத் மாதா கீ ஜே! பெங்களூரு பா.ஜ., அலுவலகத்தில் உற்சாகம்
மோடி...ஜெய் ஸ்ரீராம்...பாரத் மாதா கீ ஜே! பெங்களூரு பா.ஜ., அலுவலகத்தில் உற்சாகம்
மோடி...ஜெய் ஸ்ரீராம்...பாரத் மாதா கீ ஜே! பெங்களூரு பா.ஜ., அலுவலகத்தில் உற்சாகம்
மோடி...ஜெய் ஸ்ரீராம்...பாரத் மாதா கீ ஜே! பெங்களூரு பா.ஜ., அலுவலகத்தில் உற்சாகம்
ADDED : ஜூன் 10, 2024 04:44 AM

பெங்களூரு,: பிரதமராக நரேந்திர மோடி நேற்று, மூன்றாவது முறையாக பதவி ஏற்றதை, பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பா.ஜ., அலுவலகம் முன்பு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக, நேற்று இரவு பதவி ஏற்றார்.
பதவி ஏற்பு நிகழ்ச்சியை, பா.ஜ., தொண்டர்கள், பொதுமக்கள் பார்ப்பதற்கு வசதியாக, பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பா.ஜ., அலுவலகம் முன்பு, எல்.இ.டி., திரை அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று மாலையில் இருந்தே, பா.ஜ., அலுவலகம் முன்பு, தொண்டர்கள் குவிந்தனர்.
பிரதமராக மோடி எப்போது, பதவி ஏற்பார் என்று தொண்டர்களும், பொது மக்களும் எதிர்பார்த்து இருந்தனர்.
மோடி பதவி ஏற்றதை எல்.இ.டி., திரையில் கண்டு ரசித்தனர். அப்போது மோடி... மோடி... என்றும், ஜெய் ஸ்ரீராம்.... பாரத் மாதா கீ ஜே என்றும், உற்சாகமாக கோஷம் எழுப்பினர். இந்த சத்தம் விண்ணை பிளக்கும் அளவுக்கு இருந்தது.
பா.ஜ., அலுவலகமும் மின்னொளியில் ஜொலித்தது. இதையும், கூடிய கூட்டத்தை பார்க்கவும், திருவிழா போன்று காட்சி அளித்தது.
இதுபோல கர்நாடகாவின் பிற மாவட்டங்களிலும், பிரதமர் மோடி பதவி ஏற்பை கண்டுகளிக்க, எல்.இ.டி., திரைகள் அமைக்கப்பட்டு இருந்தன. மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்ததால், பா.ஜ., தொண்டர்கள் உற்சாக மிகுதியில் திளைத்தனர்.