Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வேட்புமனுவில் தவறான தகவல் தனி நபர் புகாருக்கு ஐகோர்ட் தடை

வேட்புமனுவில் தவறான தகவல் தனி நபர் புகாருக்கு ஐகோர்ட் தடை

வேட்புமனுவில் தவறான தகவல் தனி நபர் புகாருக்கு ஐகோர்ட் தடை

வேட்புமனுவில் தவறான தகவல் தனி நபர் புகாருக்கு ஐகோர்ட் தடை

ADDED : மார் 14, 2025 06:54 AM


Google News
பெங்களூரு: வேட்புமனுக்களில் தவறான தகவல் கூறியுள்ளதாக, தனி நபர்கள் புகார் அளிக்க முடியாது.

தேர்தல் கமிஷன் தான், இவ்விஷயத்தை பதிவு செய்ய வேண்டும் என கூறி, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் மீது தொடரப்பட்ட புகாரை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பெங்களூரு மஹாதேவபுரா பா.ஜ., - எம்.எல்.ஏ., மஞ்சுளா லிம்பாவளி, தன் மகன்கள் நடத்தும் நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளார்.

ஆனால், அவர், தேர்தலின்போது, தன் வேட்புமனுவில் அதுபற்றி குறிப்பிடவில்லை என, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நல்லுாரள்ளி நாகேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதுபோன்று, பீதர் தெற்கு பா.ஜ., - எம்.எல்.ஏ., சைலேந்திர பெல்தலே, தன் வேட்புமனுவில், தன் கிராமம் குறித்து தவறான தகவல் அளித்துள்ளார்' என, ராஜ்குமார் மட்கி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்விரு வழக்குகளும், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தன.

மஞ்சுளா லிம்பாவளி சார்பு வழக்கறிஞர் வாதிடுகையில், 'என் மனுதாரர் மகன்கள், அவர்களாக சொந்தமாக தொழில் நடத்தி வருகின்றனர். அதற்கான வருமான வரியும் செலுத்தி வருகின்றனர்.

என் மனுதாரரை நம்பி, அவர்கள் இல்லை. அவர்கள் நடத்தும் நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளனர். அது கார்ப்பரேட் அமைப்பாகும். தனி நிறுவனம் அல்ல' என்றார்.

சைலேந்திரா சார்பு வழக்கறிஞர் வாதிடுகையில், 'என் மனுதாரர், கடந்த மூன்று தேர்தல்களாக சிட்டா கிராமத்தில் தான் வசித்து வருகிறார்.

அதற்கான வாக்காளர் அடையாள அட்டையும் வைத்துள்ளார். ஒருவேளை தவறான தகவல் அளித்திருந்தாலும், தனி நபர் புகார் பதிவு செய்ய அனுமதி இல்லை' என்றார்.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி நாகபிரசன்னா, ''தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல் அளித்திருந்தால், அதை தேர்தல் கமிஷன் தான், மக்கள் பிரதிநிதிகள் சட்டம் 125 'ஏ' பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

தனி நபர்கள், நீதிமன்றத்தில் புகார் அளிக்க முடியாது. எனவே, இருவர் மீதான புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us