/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நீதிமன்றத்தில் கருப்பு கோட் 15 முதல் மே 31 வரை விலக்கு நீதிமன்றத்தில் கருப்பு கோட் 15 முதல் மே 31 வரை விலக்கு
நீதிமன்றத்தில் கருப்பு கோட் 15 முதல் மே 31 வரை விலக்கு
நீதிமன்றத்தில் கருப்பு கோட் 15 முதல் மே 31 வரை விலக்கு
நீதிமன்றத்தில் கருப்பு கோட் 15 முதல் மே 31 வரை விலக்கு
ADDED : மார் 14, 2025 06:53 AM

பெங்களூரு: கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் பரத்குமார் சுற்றறிக்கை:
கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அஞ்சாரியாவுக்கு, மாநில வழக்கறிஞர்கள் கவுன்சில், பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கடிதம் எழுதியிருந்தனர்.
கர்நாடகாவில் கோடை காலம் துவங்கி உள்ளது. இதனால், நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கருப்பு கோட் அணிந்து வாதிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா, கோவாவில் வழக்கறிஞர்கள் கருப்பு கோட் அணிய தளர்வு அளிக்கப்பட்டு உள்ளன. அதுபோன்று கர்நாடகாவிலும் கீழமை நீதிமன்றம், மாவட்டம், உயர்நீதிமன்றத்தில் கருப்பு கோட் அணிய தளர்வு அளிக்க வேண்டும்.
மாநிலத்தின் கீழமை நீதிமன்றங்களில் குளிர் சாதன வசதி இல்லை. இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தனர்.
இதற்கு பதிலளித்து, கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர், இரு சங்கங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், 'நீதிமன்றத்தில் வாதிடும்போது, வெள்ளை சட்டை, கழுத்தில் மாட்டும் பேண்ட் அகற்ற கூடாது. அதேவேளையில், மார்ச் 15ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை கருப்பு கோட் அணிய தேவையில்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.