/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரு எம்.எல்.ஏ.,க்களுடன் துணை முதல்வர் முக்கிய ஆலோசனை பெங்களூரு எம்.எல்.ஏ.,க்களுடன் துணை முதல்வர் முக்கிய ஆலோசனை
பெங்களூரு எம்.எல்.ஏ.,க்களுடன் துணை முதல்வர் முக்கிய ஆலோசனை
பெங்களூரு எம்.எல்.ஏ.,க்களுடன் துணை முதல்வர் முக்கிய ஆலோசனை
பெங்களூரு எம்.எல்.ஏ.,க்களுடன் துணை முதல்வர் முக்கிய ஆலோசனை
ADDED : ஜூலை 28, 2024 06:27 AM

பெங்களூரு, : பெங்களூரு நகர வளர்ச்சி குறித்து, நகரின் அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க்களுடன் துணை முதல்வர் சிவகுமார் நேற்று ஆலோசனை நடத்தினார்.
'பெங்களூரு பிராண்ட்' திட்டத்தின் கீழ், நகரை வளர்ச்சி செய்வது, துணை முதல்வர் சிவகுமாரின் திட்டம். பெங்., நகர வளர்ச்சி துறை அமைச்சராகவும் பதவி வகிக்கிறார்.
இந்நிலையில், நகரின் அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க்களுடன், விதான் சவுதாவில் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இதில், அமைச்சர் ஜமீர் அகமது கான், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், பா.ஜ., -- எம்.எல்.ஏ.,க்கள் விஸ்வநாத், ரவிசுப்பிரமணியா, ராமமூர்த்தி, முனிராஜ், சதீஷ்ரெட்டி, அஸ்வத் நாராயணா, முனிரத்னா, பைரதி பசவராஜ், கிருஷ்ணப்பா, மஞ்சுளா, கோபாலய்யா;
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஹாரிஸ், சீனிவாஸ், சிவண்ணா; ம.ஜ.த., எம்.எல்.சி., டி.ஏ.ஷ்ரவணா, மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார்கிரிநாத் உட்பட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், துணை முதல்வர் சிவகுமார் பேசியதாவது:
அரசியலை பூத் அளவில் செய்யலாம். தற்போது அனைத்து கட்சி தலைவர்களும் ஒன்று சேர்ந்து, பெங்களூரு நகரை மேம்படுத்துவோம்.
கிரேட்டர் பெங்களூரு
கிரேட்டர் பெங்களூரு நிர்வாக சட்ட மசோதா குறித்து யாரும் பயப்பட தேவையில்லை.
மசோதாவின் அனைத்து தகவலும் உங்கள் கைகளில் உள்ளன. ஒவ்வொரு வார்த்தையையும் படித்து பாருங்கள்.
நகர வளர்ச்சி நலன் கருதி எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் இடம்பெற்றுள்ளன. அனைவரின் வலியுறுத்தல்படி, மசோதா குறித்து பரிசீலனை செய்ய, சட்டசபை, மேல்சபை கூட்டு கமிட்டி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரச்னைகளுக்கு தீர்வு காண புதிய வடிவம் உருவாக்குவோம். கெம்பேகவுடா பெங்களூரை உருவாக்கினார். எஸ்.எம்.கிருஷ்ணா உலக தரத்துக்கு உயர்த்தினார்.
'ஸ்கை டெக்'
தகவல் தொழில்நுட்பம், மனிதவளம், வானிலை, கலாசாரத்தை பார்த்து, பெங்களூரு வந்த மக்கள் திரும்பி செல்வதில்லை. பணி ஓய்வுக்கு பின்னும், இங்கேயே தங்குவதற்கு விரும்புகின்றனர்.
விதான் சவுதாவை தவிர, பெங்களூரில் கவர்ச்சிகரமான சுற்றுலா தலங்கள் இல்லை. லால்பாக், கப்பன் பூங்காவை காலம் முடித்து விட்டது. சிறிய குழந்தைகள், ஜவஹர்லால் நேரு கோளரங்கத்தை பார்க்கலாம். எனவே 'ஸ்கை டெக்' எனும் வானுயர்ந்த கோபுரத்தை அமைத்து, சுற்றுலா மேம்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.