/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரு நகரின் சாலை பள்ளங்கள் கண்டறிய 15 நுண்ணறிவு கேமரா பெங்களூரு நகரின் சாலை பள்ளங்கள் கண்டறிய 15 நுண்ணறிவு கேமரா
பெங்களூரு நகரின் சாலை பள்ளங்கள் கண்டறிய 15 நுண்ணறிவு கேமரா
பெங்களூரு நகரின் சாலை பள்ளங்கள் கண்டறிய 15 நுண்ணறிவு கேமரா
பெங்களூரு நகரின் சாலை பள்ளங்கள் கண்டறிய 15 நுண்ணறிவு கேமரா
ADDED : ஜூன் 01, 2024 04:32 AM

பெங்களூரு, : ''பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகளின் நிலையை அறிய, தலா 30 ஆயிரம் ரூபாய் செலவில் 15 செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் வாங்கப்பட்டுள்ளன,'' என, மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி:
பெங்களூரு மாநகராட்சியில், 1,400 கி.மீ., சாலை, சர்வீஸ் சாலைகள் உள்ளன. மழையால் குண்டும், குழியுமாக மாறி உள்ளன. அனைத்து சாலைகளையும் சரிபார்ப்பதில் சிரமம் உள்ளது. எனவே, ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் மூலம், சாலையில் உள்ள பள்ளங்கள், குப்பை, துாசி ஆகியவற்றை அடையாளம் காண முடிவு செய்யப்பட்டது.
இதற்காக 5 லட்சம் ரூபாய் மதிப்பில் 15 ஏ.ஐ., கேமராக்கள் வாங்கப்பட்டு உள்ளன.
இந்த கேமராக்கள், மாநகராட்சி செயற்பொறியாளர்களின் வாகனங்களில் பொருத்தப்படும்.
கேமரா பொருத்தப்பட்ட வாகனங்கள், மணிக்கு ஐந்து கி.மீ., வேகத்தில் செல்லும். அப்போது சாலையில் உள்ள பள்ளங்கள் குறித்த தகவல்களை சேகரிக்கும்.
ஒவ்வொரு வாகனமும் நான்கு முதல் ஐந்து மணி நேரம், 20 கி.மீ., துார சாலையை ஸ்கேன் செய்யும். இதன் மூலம் சாலையின் நிலையை அறிந்து, பணிகளை மேற்கொள்ள முடியும். இம்முயற்சி வெற்றி பெற்றால், கூடுதல் கேமராக்கள் வாங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.