/இணைப்பு மலர்/விவசாய மலர்/மஞ்சள் ஒட்டுண்ணி அட்டையை காளான் குடில்களில் பயன்படுத்தலாம்மஞ்சள் ஒட்டுண்ணி அட்டையை காளான் குடில்களில் பயன்படுத்தலாம்
மஞ்சள் ஒட்டுண்ணி அட்டையை காளான் குடில்களில் பயன்படுத்தலாம்

PUBLISHED ON : பிப் 05, 2025

காளான் வளர்ப்பில்,மஞ்சள் ஒட்டுண்ணி அட்டை பயன்பாடு குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர்நெல் ஆராய்ச்சி மைய தாவர நோயியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் செ.சுதாஷா கூறியதாவது:
நெல், காய்கறி, மா உள்ளிட்ட பல்வேறு பயிர்களில், இனக்கவர்ச்சி பொறிகள், மஞ்சள் நிற ஒட்டுண்ணி அட்டைகள் ஆகியவை பயன்பாடு அதிகமாக உள்ளன. இந்த இனக்கவர்ச்சி பொறிகளால், உணவு விளைபொருட்களை தாக்கும் பூச்சிகளின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.
அந்த வரிசையில், காளான் குடில்களிலும் இனக்கவர்ச்சி பொறிகள் மற்றும் ஒட்டுண்ணிஅட்டைகளை பயன் படுத்தலாம். குறிப்பாக, காளான் குடில்களில், சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் சிறு சிறு ஒட்டுண்ணி பூச்சிகள் காளான் இதழ்களை தின்று பெரும் சேதத்தை ஏற்படுத்தும்.
இதனால், காளானில் மகசூல் மற்றும் வருவாய்இழப்பீடு ஏற்படுத்தும்.இதை கட்டுப்படுத்த,ஒரு குடிலுக்குஇரண்டு மஞ்சள் நிறஒட்டுண்ணி அட்டை பயன்படுத்தலாம்.
இதன் வாயிலாக, இதழ்களை தின்னும்பூச்சிகளை வெகுவாக கட்டுப்படுத்தி, காளானில் அதிக மகசூல்மற்றும் வருவாய் ஈட்டு வதற்கு வழிவகுக்கும்.
இவ்வாறு அவர்கூறினார்.
தொடர்புக்கு: முனைவர் செ.சுதாஷா, திரூர்.
97910 15355.