Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/விவசாய மலர்/வருவாய் ஈட்டும் புளியம் பூ ரக கத்தரிக்காய்

வருவாய் ஈட்டும் புளியம் பூ ரக கத்தரிக்காய்

வருவாய் ஈட்டும் புளியம் பூ ரக கத்தரிக்காய்

வருவாய் ஈட்டும் புளியம் பூ ரக கத்தரிக்காய்

PUBLISHED ON : ஏப் 03, 2024


Google News
Latest Tamil News
புளியம் பூ ரக கத்தரிக்காய் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி விவசாயி பி.குகன் கூறியதாவது:

காய்கறி, கீரை உள்ளிட்ட பல வித காய்கறிகளை ரசாயன உரம் இன்றி விளைவித்து வருகிறேன். வீட்டிற்கு தேவையான காய்கறிகளை எடுத்துக் கொண்டு, மீதியை விற்று விடுகிறேன்.

மணல் கலந்த களிமண் நிலத்தில், காய்கறி ஆகிய தோட்டக்கலை பயிர்களை பயிரிட்டுள்ளேன்.

இதில், புளியம் பூ ரக வெள்ளை நிற கத்தரிக்காய் சாகுபடி செய்துள்ளேன். இது, 45வது நாளில் பூ பூத்து, 60 நாளில் காய்கள் காய்க்க துவங்கும். நீர் பாசனம் மற்றும் இயற்கை உரம் நிர்வாகம் முறையாக கையாண்டால், நான்கு மாதங்கள் வரையில் கத்தரிக்காய் அறுவடை செய்யலாம்.

இந்த வெள்ளை நிற கத்தரிக்காய்களுக்கு பூச்சி தாக்குதல் அறவே இல்லை. நல்ல மகசூலும் மற்றும் சுவையுடன் காய்கள் கொடுப்பதால், கூடுதல் விலை கொடுத்து வாங்கவும் மக்கள் தயக்கம் காட்டுவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.



தொடர்புக்கு: பி. குகன், 94444 74428.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us