/இணைப்பு மலர்/விவசாய மலர்/இரு வித பூக்களை பராமரித்தால் அதிக மகசூலில் தர்ப்பூசணிஇரு வித பூக்களை பராமரித்தால் அதிக மகசூலில் தர்ப்பூசணி
இரு வித பூக்களை பராமரித்தால் அதிக மகசூலில் தர்ப்பூசணி

PUBLISHED ON : ஜன 03, 2024

இருவித பூக்கள் பராமரிப்பு குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட விதை பரிசோதனை நிலைய அலுவலர் கு.ஜெயரமான் கூறியதாவது:
தர்ப்பூசணி சாகுபடியில், ஆண், பெண், இருபாலர் ஆகிய பூக்கள் பூக்கும். இதில், பெண் பூ மற்றும் இருபாலர் பூக்களில் மட்டுமே, அதிக காய்கள் பிடிக்கும் தன்மை உள்ளன.
தர்ப்பூசணி சாகுபடியில், பெண் பூக்கள் மற்றும் இருபாலர் பூக்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தினால், கூடுதல் காய்கள் பிடிக்கும் தன்மை அதிகரித்து, கூடுதல் விளைச்சலுக்கு வழி வகுக்கும்.
இதற்கு, தர்ப்பூசணி சாகுபடியில் இரு இலை விடும் போது, 2.5 மில்லி எத்ரல் வளர் ஊக்கியை, 10 லிட்டர் நீரில் கலந்த கரைசலை, ஒரு வார இடைவெளி விட்டு,மூன்று வாரங்களுக்கு தெளிக்க வேண்டும்.
இதுபோல, செய்வதன் வாயிலாக, தர்ப்பூசணி சாகுபடியில், 15 சதவீதம் வரையில் மகசூல் அதிகமாக கொடுக்கும்.
தர்ப்பூசணி விதை முளைத்த, 40 நாட்களுக்கு பின், எத்ரல் வளர் ஊக்கியை, 15 நாள் இடைவெளியில் நீரில் கரையும் உரத்தின் கரைசலை தெளிப்பதன் வாயிலாக, 25 சதவீதம் மகசூல் பெற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: கு.ஜெயராமன்,
95974 42347.