Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/விவசாய மலர்/மக்காச்சோளம் விதை உற்பத்தி ஏக்கருக்கு ரூ.1 லட்சம் லாபம்

மக்காச்சோளம் விதை உற்பத்தி ஏக்கருக்கு ரூ.1 லட்சம் லாபம்

மக்காச்சோளம் விதை உற்பத்தி ஏக்கருக்கு ரூ.1 லட்சம் லாபம்

மக்காச்சோளம் விதை உற்பத்தி ஏக்கருக்கு ரூ.1 லட்சம் லாபம்

PUBLISHED ON : பிப் 12, 2025


Google News
Latest Tamil News
'மக்காச்சோள வீரிய ஒட்டு ரக விதை உற்பத்தி செய்தால், ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் லாபம் ஈட்ட முடியும். விவசா யிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளித்து உதவ தயார்' என, கோவை வேளாண் பல்கலை அழைப்பு விடுத்துள்ளது.

கோவை வேளாண் பல்கலை பயிர் இனப்பெ ருக்கம் மற்றும் மரபியல் மைய இயக்குநர் ரவிகேச வன் கூறியதாவது:

நாட்டின் அனைத்து பகுதிகளிலும், அனைத்து பருவங்களிலும் சாகுபடி செய்து, நல்ல லாபம் தரும் ஒரே பயிர் மக்காச்சோளம். கால்நடை தீவனம், எத்தனால் உற்பத்தி என, தேவை அதிகம் என்பதால், எவ்வளவு விளைவித்தா லும், நிரந்தரமாக நல்ல விலை கிடைக்கிறது. இத னால், விதைக்கு தேவை அதிகரித்து வருகிறது. மக் காச்சோள வீரிய ஒட்டு ரக உற்பத்தியில், மிக நல்ல லாபம் ஈட்ட முடியும்.

வீரிய ஒட்டு ரக விதை உற்பத்தி

தனியார் வீரிய ஒட்டு ரகம் கிலோ 350 400 ரூபாய் வரை விற்கப்படு கிறது. வேளாண் பல்க இலயிக்கும். வேரூபாய்க்கு கலையில் இருந்து, இது வரை 11 வீரிய ஒட்டு ரகங் களும், வாகரை ஆராய்ச்சி மையத்திலிருந்து இரு ரகங்களும் வெளியிடப் பட்டு உள்ளன.

வீரிய ஒட்டு ரகங்கள், அயல் மகரந்த சேர்க்கை கொண்டவை. இந்த ரக விதை உற்பத்தி யில், இரு முக்கிய விஷயங்கள் உள் নাডা, முதலாவது பயிர் விலகு தூரம். அடுத்தது, பெண் ரகத்தில் இருக்கும் ஆண் பூக்களை அகற்றுவது.

ஒரு ஆண் பூவில் இருந்து 7 10 லட்சம் ரூபாய் வரை மக ரந்த துகள்கள் இருக்கும். காற்றில் பரவும் என்பதால், இரு விதை உற்பத்தி வயல் களுக்கு இடையே 500 மீட் டர் இடைவெளி இருக்க வேண்டும். இதை பயிர் விலகு தூரம் என்கிறோம். விதை உற்பத்திக்கான மக்காச்சோள பயிர் நடவு செய்யப்பட்டு 20 நாட் கள் இடைவெளியில், மற்றொரு மக்காச்சோள விதைப்பயிரை நடவு செய் யலாம். இதனால், பூக்கும் காலம் மாறுபட்டு, மகரந் தச் சேர்க்கையில் தேவை யற்ற கலப்பு நடக்காது.

ஆண், பெண் ரகங்கள்

வீரிய ஒட்டு ரக விதை உற்பத்திக்கு, ஆண் ரகம் இரு வரிசை யும், பெண் ரகத் தில் நான்கு வரி ம் விதைக்க சையும் வேண்டும். முதலில் பெண் ரகம் நான்கு வரிசை யும், ஆண் ஒரு வரி சையும் விதைத்து விடலாம். மூன்றாவது நாளில் இரண்டா வது நீர் பாய்ச்சும் போது, ஆண் ரகத்தின் இரண்டா வது வரிசையை ஊன்றி விடலாம்.

இதனால், பெண் ரக சூல்முடி கொஞ்சம் தாமத மாக வந்தாலும், இரண்டா வதாக நடும் ஆண் ரகத்தில் உள்ள மகரந்தம், அந்த தாம தத்தை ஈடுகட்டி, மகரந்த சேர்க்கை நடக்கும். விதை உற்பத்தி பாதிக்காது.

பூவை அகற்றுதல்

வீரிய ஒட்டு ரகம் என் பதால், ஆண் ரகத்தில் இருந்து தான் பெண் சூல் முடிக்கு மகரந்தம் போக வேண் வேண்டும்.

பெண் ரகத்தில் இருந்தே செல்லக் கூடாது. எனவே, பெண்ரகத்தில் பூவெளியே வருவதற்கு முன்பே, உருவி அகற்றி விட வேண் டும். தொடர்ந்து 10 - 15 நாட்களுக்கு மிக கவன மாக அகற்ற வேண்டும். ஒரு பூவைக் கூட விட்டு விடக்கூடாது. இதுதான் மிக முக்கியமான பணி.

அறுவடை

அறுவடையின் போது முதலில் ஆண் ரக கதிர் களை அகற்றி விட வேண் டும். இதனால், எஞ்சியி ருப்பது வீரிய ஒட்டு ரக விதைகள் மட்டும் என் பது உறுதியாகி விடும். அவற்றை ஓரிரு நாட்க ளுக்கு பின், தனியே சேக ரித்துக் கொ தனியே.

ஏக்கருக்கு 800 900 கிலோ வீரிய ஒட்டு ரக விதையை உற்பத்தி செய் யலாம். விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்யலாம். விற்க முடியாதவற்றை கிலோ 150 170 ரூபாய்க்கு வேளாண் பல் கலையே திரும்ப வாங்கிக் கொள்ளும். இதனால், ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும். விதை உற் பத்தி செய்ய விரும்பும் விவசாயிகள், வேளாண் பல்கலை அல்லது வாகரை ஆராய்ச்ல மையத்தை அணுகலாம்.

ஆண், பெண்ரகங்களைத் தனித்தனியாக கொடுப் போம். விதைக்கும் சமயத் தில் எங்கள் தரப்பில் ஒருவர் வந்து உதவுவார். பயிற்சியும் கொடுக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us