Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/விவசாய மலர்/குள்ளக்கார் நெல்லில் அதிக மகசூல் பெறலாம்

குள்ளக்கார் நெல்லில் அதிக மகசூல் பெறலாம்

குள்ளக்கார் நெல்லில் அதிக மகசூல் பெறலாம்

குள்ளக்கார் நெல்லில் அதிக மகசூல் பெறலாம்

PUBLISHED ON : ஜன 01, 2025


Google News
Latest Tamil News
குள்ளக்கார் பாரம்பரிய ரக நெல் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி விவசாயி எஸ்.வீரராகவன் கூறியதாவது:

பாரம்பரிய ரக நெல்லில், குள்ளக்கார் ரகமும் ஒன்று. இது, 100 நாள் விளையக்கூடிய பாரம்பரிய ரக நெல். 1 ஏக்கருக்கு, 15 கிலோ விதை நெல்லை பயன்படுத்தி, நாற்று விட்டு இயந்திர நடவு செய்துள்ளேன். குறிப்பாக, குள்ளக்கார் ரக நெல் குறைந்த நாட்களில் மகசூல் வரும் என்பதால், 20 நாட்களுக்குள் நடவு செய்துவிட வேண்டும். அப்போது தான் நீர் மற்றும் உரம் நிர்வாகத்தை கையாளும்போது, அதிக மகசூல் பெற முடியும்.

மேலும், 1 ஏக்கருக்கு, 30 மூட்டை நெல் வரையில் அறுவடை செய்யலாம். இது, பாரம்பரிய ரகநெல்லில் கிடைப்பதை விட அதிக மகசூலாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு: எஸ்.வீரராகவன், 98941 20278





      Our Apps Available On




      Dinamalar

      Follow us