/இணைப்பு மலர்/விவசாய மலர்/வான் கோழிக்கு தீவனமாகும் பச்சை கீரைகள்வான் கோழிக்கு தீவனமாகும் பச்சை கீரைகள்
வான் கோழிக்கு தீவனமாகும் பச்சை கீரைகள்
வான் கோழிக்கு தீவனமாகும் பச்சை கீரைகள்
வான் கோழிக்கு தீவனமாகும் பச்சை கீரைகள்
PUBLISHED ON : ஜூலை 17, 2024

வான் கோழிகளுக்கு தீவனம் அளிப்பது குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், சாமந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி டி.தமிழ்மணி கூறியதாவது:
நாட்டுக்கோழிகளுடன், வான்கோழி குஞ்சுகளையும் வளர்க்கலாம். வான்கோழி குஞ்சுகள் துவக்கத்தில் தீவனம் சாப்பிடாமல், சில நேரங்களில் இறக்க நேரிடும். இதை தவிர்க்க, பிரகாசமான வெளிச்சத்தில், தீவனம் அளிக்க வேண்டும். தீவன தட்டுகளில், வண்ண கோலி குண்டுகளை போட்டு, தீவனத்தை உண்ணும் அளவிற்கு, வான்கோழிகளை துாண்டலாம். மேலும், 1 லிட்டர் தண்ணீருடன், 100 மில்லி பால், வேக வைத்த முட்டை ஆகியவை, 15 நாட்கள் வரை வழங்கலாம். இதுதவிர, வான்கோழி பச்சை கீரைகளை விரும்பி உண்ணுவதால், நறுக்கிய பச்சை கீரைகளை தீவனத்தில் சேர்த்தல் வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: டி.தமிழ்மணி,
96883 34640.