பயிர் வளர்ச்சிக்கு உதவும் பூஞ்சாணம்
பயிர் வளர்ச்சிக்கு உதவும் பூஞ்சாணம்
பயிர் வளர்ச்சிக்கு உதவும் பூஞ்சாணம்
PUBLISHED ON : ஜன 01, 2025

மதுரையின் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாக மையத்தில் டிரைகோடெர்மா விரிடி பூஞ்சாணம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பூஞ்சாணம் செடிகளில் நோய் ஏற்படுவதை தடுக்கிறது.
பூஞ்சாணத்தின் இழைகள் மண்ணிலுள்ள நோய்க்கிருமிகளுடன் உணவிற்காக போட்டியிட்டு என்சைம் மற்றும் நச்சுப்பொருட்களை உற்பத்தி செய்து நோய்க்கிருமிகளின் எண்ணிக்கையை குறைக்கிறது. விதையை சுற்றி பூஞ்சாண இழைகளால் பாதுகாப்பு வளையம் அமைத்து நோய்க்கிருமிகள் தாக்காமல் பாதுகாக்கிறது.
பருத்தி, கம்பு, பயறு வகைகள், நிலக்கடலை, எள், சூரியகாந்தி, மஞ்சள், காய்கறி மற்றும் பழப்பயிர்களை தாக்கும் வாடல், தண்டழுகல், வேரழுகல் நோய்களை டிரைக்கோடெர்மா விரிடி கட்டுப்படுத்தும். ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் விரிடி கலந்து 24 மணி நேரம் கழித்து விதைக்க வேண்டும். நிலத்தில் இடும் போது ஒரு கிலோ விரிடியை 50 கிலோ தொழுஉரத்துடன் கலந்து இட வேண்டும். அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களில் கிலோ ரூ.130க்கு கிடைக்கும்.
- ஆனந்தன்
வேளாண் உதவி இயக்குநர்
மேலுார், மதுரை