Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/விவசாய மலர்/அதிக வருவாய்க்கு பாலுார் - 1 ரக சிறுகீரை

அதிக வருவாய்க்கு பாலுார் - 1 ரக சிறுகீரை

அதிக வருவாய்க்கு பாலுார் - 1 ரக சிறுகீரை

அதிக வருவாய்க்கு பாலுார் - 1 ரக சிறுகீரை

PUBLISHED ON : ஜன 01, 2025


Google News
Latest Tamil News
பாலுார் - 1 ரக சிறுகீரை சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம்,திரூர் நெல் ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் பிரீத்தி கூறிய தாவது:

தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்தில், கோவை - 1, கோவை - 2, கோவை - 5 முளைக்கீரை மற்றும் தண்டு கீரை மற்றும் கோவை - 3, கோவை - 4 அரைக்கீரை ஆகிய கீரை வகைகளை விவசாயிகள் சாகுபடி செய்யலாம்.

பி.எல்.ஆர்., - 1 எனஅழைக்கப்படும் பாலுார் - 1 ரக சிறுகீரை சாகுபடி செய்ய லாம். இதற்கு, களிமண், மணல் கலந்த நிலத்தில் சாகுபடி செய்யலாம். 1 ஏக்கருக்கு 1 கிலோ விதை போதுமானது.

அதற்கேற்ப, நிலத்தில் தொழு உரம் மற்றும் இயற்கை உரங்களை போட்டு மண்ணை பதப்படுத்தி விதைக்கலாம். இதை, 20 நாட்களுக்குப் பின் அறுவடை செய்யலாம்.

10 சென்ட் நிலத்தில், 10,000 ரூபாய் வரையில் மகசூல் பெறலாம். 1 ஏக்கர் சாகுபடி செய்தால், மாதத்திற்கு 1 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டலாம்.

இவ்வாறு அவர்கூறினார்.



தொடர்புக்கு: பிரீத்தி,

இணைப்பேராசிரியர்,

திரூர் நெல் ஆராய்ச்சி நிலையம்,

திருவள்ளூர்.






      Our Apps Available On




      Dinamalar

      Follow us