PUBLISHED ON : மே 28, 2024

விமானப்படையில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஏ.எப்.சி.ஏ.டி., பிரிவில் பிளையிங் 38,கிரவுன்ட் டியூடி (டெக்னிக்கல் 166, டெக்னிக்கல் அல்லாதது 95) உட்பட மொத்தம் 304 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பிளையிங் டியூடி பிரிவுக்கு கணிதம், இயற்பியல் பாடத்துடன் குறைந்தது 50% மதிப்பெண்ணுடன் பிளஸ் 2 (or) ஏதாவது ஒரு பட்டப்படிப்பு (or) பி.இ., / பி.டெக்., கிரவுன்ட் டியூடி டெக்னிக்கல்பணிக்கு பி.இ., / பி.டெக்., டெக்னிக்கல் அல்லாத பணிக்கு பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.7.2025 அடிப்படையில் பிளையிங் பிராஞ்ச் 20 - 24, கிரவுன்ட் டியூடி பணிக்கு 20 - 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 550
கடைசிநாள்: 28.6.2024
விவரங்களுக்கு: https://afcat.cdac.in