Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/கடலோர காவல் படை பணி

கடலோர காவல் படை பணி

கடலோர காவல் படை பணி

கடலோர காவல் படை பணி

PUBLISHED ON : பிப் 06, 2024


Google News
Latest Tamil News
இந்திய கடலோர காவல்படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

காலியிடம்: நேவிக் (ஜெனரல் டியூட்டி) பிரிவில் 261 இடங்கள் உள்ளன. இதில் மண்டலம் வாரியாக வடக்கு 79, மேற்கு 66, வடகிழக்கு 68, கிழக்கு 33, வடமேற்கு 12, அந்தமான் நிகோபர் 3 உள்ளன. கிழக்கு மண்டலத்தில் ஆந்திரா, தமிழகம், புதுச்சேரி உள்ளன.

கல்வித்தகுதி: கணிதம், இயற்பியல் பாடத்துடன் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

வயது: 18 - 22 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, உடல்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 27.2.2024

விபரங்களுக்கு: joinindiancoastguard.cdac.in





      Our Apps Available On




      Dinamalar

      Follow us