PUBLISHED ON : ஜூன் 15, 2025

ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மாதம், மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை, உலக தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
உலகிலேயே முதல் முறையாக, ஜூன் 19, 1910ல், அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில், தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. இதற்கான முயற்சிகளை எடுத்தவர், சோனாரா டாட் என்ற பெண்மணி.
கடந்த, 1909ல், சர்ச் ஒன்றில், அன்னையர் தினம் பற்றி குறிப்பிட்டதை கேட்ட அவர், தந்தையர் தினமும் கொண்டாடப்பட வேண்டும் எனக் கருதினார். அடுத்த ஆண்டே அதை நிறைவேற்றினார்.
பின்னர், 1966ம் ஆண்டு, தந்தையர் தினத்தை அங்கீகரித்து, ஆண்டுதோறும் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக கொண்டாடப்படும் என, அறிவித்தார், அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சன். அதன் பின், ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, 1972ல், ஒரு சட்டத்தின் மூலம், தந்தையர் தினத்தை, தேசிய விடுமுறை தினமாக அறிவித்தார், அதிபர் நிக்சன்.