Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

PUBLISHED ON : ஏப் 28, 2024


Google News
Latest Tamil News
முன்னணி, 'ஹீரோ'வாகும், பிரதீப் ரங்கநாதன்!

ஜெயம் ரவி நடித்த, கோமாளி படத்தை இயக்கி அறிமுகமான, பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தை இயக்கி நடித்து, 'மெகா ஹிட்' கொடுத்தார். அதனால், சிம்பு, சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களின் கால்ஷீட்டுக்கு காத்திருந்த சில இயக்குனர்கள் தற்போது, பிரதீப் பக்கம் திரும்பி விட்டனர்.

அந்த வகையில், விக்னேஷ் சிவன், சுதா கொங்கரா மற்றும் அஸ்வத் மாரிமுத்து என, மூன்று இயக்குனர்களின் படங்களில், 'ஹீரோ'வாக நடித்து வருகிறார். குறிப்பாக, 'இன்றைய இளவட்டங்களை கவரக் கூடிய, 'டிஜிட்டல்' காதல் கதைகளில் மட்டுமே நடிப்பேன்...' என்று சொல்லியே, படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார், பிரதீப் ரங்கநாதன்.

சினிமா பொன்னையா

கவர்ச்சிக்கு மாறிய, நந்திதா!

ஆரம்பத்தில், அடக்க ஒடுக்கமான குடும்ப வேடங்களில் நடித்து வந்த, அட்டகத்தி நந்திதா, சமீபகாலமாக, மாடர்ன், 'கெட் - அப்'புக்கு மாறியுள்ளார். இருப்பினும், கோலிவுட் சினிமா, அவரை ஆதரிக்காத நிலையில், தெலுங்கில், 'டூ பீஸ்' நடிகையாக உருவெடுத்திருக்கிறார்.

தற்போது, இரண்டு தெலுங்கு படங்களில், உச்சகட்ட கவர்ச்சியை வெளிப்படுத்தி, இளசுகளின், 'ஹாட் பீட்'டை எகிற வைக்கும் காமக்கொடூர நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இதன் காரணமாக, திடீரென்று டோலிவுட்டில், பரபரப்பு வளையத்துக்குள் வந்திருக்கிறார், நந்திதா.

எலீசா

'ரூட்'டை மாற்றும், சமந்தா!

கதையின் நாயகியாக சமந்தா நடித்த, யுடர்ன், ஓ பேபி உள்ளிட்ட சில படங்கள், அவருக்கு, 'ஹிட்'டாக அமைந்தன. இந்நிலையில், யசோதா மற்றும் சாகுந்தலம் என, அவர் பெரிதும் எதிர்பார்த்த படங்கள், படுதோல்வி அடைந்து விட்டன.

அதனால், தொடர்ந்து கதையின் நாயகியாக நடிக்க விருப்பமில்லை என்று சொல்லி, மீண்டும் பிரபல, 'ஹீரோ'களுடன் நடிப்பதில் ஆர்வம் காட்டத் துவங்கி இருக்கிறார், சமந்தா. குறிப்பாக, புஷ்பா படத்தில் நடித்தது போன்று, கவர்ச்சி, 'ஹீரோயின்' ஆக மீண்டும், அதிரடி குத்தாட்டம் போட தயாராக இருப்பதாக, 'கமர்ஷியல்' இயக்குனர்களுக்கு, துாது விடுத்துள்ளார்.

— எலீசா

விஜய் பட இயக்குனர்களுக்கு குறி வைக்கும், சிவகார்த்திகேயன்!

தன், 69வது படத்தோடு சினிமாவுக்கு, 'குட்-பை' சொல்ல, விஜய் முடிவெடுத்து விட்டதால், அவரது இடத்தை பிடிப்பதற்கு, பல நடிகர்களும் கோலிவுட்டில் போட்டா போட்டியில் குதித்துள்ளனர். அந்த வகையில், விஜயை வைத்து, படம் இயக்கிய முக்கிய இயக்குனர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார், சிவகார்த்திகேயன்.

குறிப்பாக, விஜய் நடிப்பில், துப்பாக்கி, கத்தி மற்றும் சர்க்கார் போன்ற, படங்களை இயக்கிய, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்தில், தற்போது நடித்து வருகிறார், சிவகார்த்திகேயன். அடுத்து, விஜயை வைத்து, தற்போது, கோட் படத்தை இயக்கி வரும், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கப் போகிறார். இதையடுத்து, மேலும் சில, விஜய் பட இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்.

— சி.பொ.,

கறுப்புப் பூனை!

தளபதி நடிகரின் படத்தை இயக்கி வரும், மங்காத்தா இயக்குனர், படப்பிடிப்புக்கு முன், ஒரு, 'பட்ஜெட்' கொடுத்தவர், இப்போது படப்பிடிப்பு செலவை, மேலும், பல கோடி ரூபாய்க்கு உயர்த்தி விட்டுள்ளார்.

குறிப்பாக, ஏற்கனவே படமாக்கிய காட்சிகளை, அவர் திரும்பத் திரும்ப எடுப்பதால், 'பட்ஜெட்' எகிறிக் கொண்டே செல்கிறதாம். இதனால், அதிர்ச்சி அடைந்த பட நிறுவனம், 'எதிர்பார்த்தபடி இப்படம் விற்பனையாகா விட்டால், எங்களது நஷ்டத்தை குறைக்க, உங்களின் சம்பளத்தில் தான் கை வைப்போம்...' என்று, மங்காத்தா இயக்குனரை எச்சரித்து உள்ளது.

சினி துளிகள்!

* பிரபுதேவா நடித்த, காதலன், மின்சார கனவு உள்ளிட்ட சில படங்களுக்கு, இசையமைத்தார், ஏ.ஆர்.ரஹ்மான். 25 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தற்போது, பிரபு தேவா நடிக்கும் ஒரு படத்திற்கு, இசையமைக்க போகிறார்.

* நயன்தாராவின் பெயருக்கு முன்னால், 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று, பட்டப்பெயர் சூட்டியுள்ள நிலையில், த்ரிஷாவின் பெயருக்கு முன், 'சவுத் குயின்' என்று, போடத் துவங்கியுள்ளனர்.

* வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும், கோட் படம், செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

* திருமணத்திற்கு பிறகு, ஒரு படத்தில் நடிப்பதற்கு, மூன்று கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்கிறார், காஜல் அகர்வால்.

அவ்ளோதான்!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us