PUBLISHED ON : ஏப் 14, 2024

மாங்காய் - வேப்பம்பூ பச்சடி!
தேவையான பொருட்கள்: இரண்டு மாங்காயை தோல், கொட்டை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கவும். வேப்பம் பூ - இரண்டு தேக்கரண்டி, கடுகு, உளுத்தம் பருப்பு - தலா இரண்டு தேக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு, வெல்லம் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - இரண்டு, பெருங்காயத்துாள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி, நெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குக்கரில் மாங்காய் துண்டுகளைப் போட்டு தண்ணீர் தெளித்து, இரண்டு விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும். ஆறிய பின் மசிக்கவும். வாணலியில் நெய்விட்டு வேப்பம்பூ சேர்த்து, வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
பிறகு, அதே வாணலியில், எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்துாள், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். இதனுடன் மசித்த மாங்காய், உப்பு, வெல்லம் சேர்த்து ஒரு கொதி வந்த பின், நெய்யில் வறுத்த வேப்பம்பூ மேலே சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: வேப்பம்பூ நிறைய கிடைக்கும் காலங்களில் நிழலில் காயவைத்து பக்குவப்படுத்தி வைத்துக் கொள்ளலாம். நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.
முக்கனிப் பாயசம்!
தேவையான பொருட்கள்: தோல் சீவி சிறிய துண்டுகளாக்கிய மாம்பழம் - இரண்டு, தோல் உரித்து பொடியாக நறுக்கிய வாழைப்பழம் - மூன்று, கொட்டை நீக்கி சிறிய துண்டுகளாக்கிய பலாச்சுளை - ஆறு, வெல்லத்துாள் - தேவையான அளவு, தேங்காய் துருவல் - ஒரு கப், ஏலக்காய் - நான்கு, முந்திரி - 10, திராட்சை - 15, நெய் - ஒரு தேக்கரண்டி.
செய்முறை: மாம்பழம், வாழைப்பழம் மற்றும் பலாச்சுளை துண்டுகளை சிறிதளவு தனியாக எடுத்து வைக்கவும். மீதியுள்ள பழங்களை மிக்சியில் விழுதாக அரைக்கவும்.
வாணலியில், சிறிதளவு நெய்யில், முந்திரி, திராட்சையை வறுத்து, தனியாக எடுத்து வைத்த பழங்களைச் சேர்த்து, புரட்டி எடுக்கவும். அதில், வெல்லம் சேர்த்து, மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு கொதிவந்ததும் இறக்கி வடிகட்டவும்.
தேங்காய் துருவலுடன் ஏலக்காய் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து கெட்டியான பால் எடுக்கவும். பிறகு, அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நெய் சேர்த்து, அரைத்த பழ விழுது சேர்த்து, இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
இதில், வெல்லக் கரைசல், தேங்காய்ப்பால் ஊற்றி, நன்கு கொதித்தவுடன், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் தனியாக எடுத்து வைத்த பழங்களை சேர்த்து, நன்கு கொதி வந்ததும் இறக்கவும்.
கேரள உண்ணியப்பம்!
தேவையான பொருட்கள்: பச்சரிசி - ஒரு கப், வாழைப்பழம் - ஒன்று, வெல்லம் - அரை கப், ஏலக்காய்த்துாள் - ஒரு சிட்டிகை, தேங்காய்த் துண்டுகள் - தேவையான அளவு, நெய் - தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசியை சுத்தம் செய்து மாவாக அரைக்கவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டி, பச்சரிசி மாவுடன் சேர்த்து, ஏலக்காய்த்துாள், பிசைந்த வாழைப்பழம் சேர்க்கவும். இதில், தேங்காய் துண்டுகளை சேர்த்துக் கலந்து கரைத்து வைக்கவும்.
குழிபணியார சட்டியில் நெய்யை தடவி, கரைத்த மாவை சிறு சிறு அப்பங்களாக ஊற்றி வேகவிட்டு எடுக்கவும்.
இளநீர் பாயசம்!
தேவையான பொருட்கள்: இளநீர் வழுக்கை - அரை கப், இளநீர் - ஒரு கப், திக்கான பால் - ஒரு கப், மில்க்மெய்ட் - கால் கப், சர்க்கரை - ஒரு தேக்கரண்டி.
செய்முறை: இளநீருடன் வழுக்கை சேர்த்து, மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். பாலுடன் சர்க்கரை சேர்த்து, கெட்டியாக காய்ச்சவும். பால் நன்றாக காய்ந்ததும், மில்க்மெய்டை சேர்த்துக் கொதிக்கவிட்டுக் கிளறவும்.
பிறகு, அரைத்து வைத்துள்ள இளநீர் கலவையை பாலுடன் சேர்த்து இறக்கவும். ஆறியதும் பிரிட்ஜில் வைத்து, குளிர்ச்சியாக பரிமாறவும். ஏலக்காய் சேர்க்கக் கூடாது.
குறிப்பு: இளநீருடன், வழுக்கையை சேர்த்து அரைக்கும்போது, தலா இரண்டு பாதாம், முந்திரி சேர்த்துக் கொண்டால், ருசி அதிகரிக்கும்.