Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

PUBLISHED ON : ஏப் 14, 2024


Google News
Latest Tamil News
* எஸ். அருண்பிரகாஷ், துாத்துக்குடி: 'எங்களது அறிவிக்கப்படாத பிரதமர், ராகுல்...' என்கிறாரே, துரை வைகோ.

முதலில், 'இண்டியா' கூட்டணி ஜெயிக்குமா என்பதே, சந்தேகத்துக்கு இடமாக உள்ளதே... இதில், அறிவிக்கப்படாத பிரதமர் என்று பேசுவதெல்லாம், கேலி கூத்து தான்!

    

சி. உமா, தேனி: வழக்கம்போலவே, அந்துமணிக்கு அடையார், 'இன்டியன் டெரைன்' கடையிலிருந்து, 12 கட்டம் போட்ட சட்டைகள் வந்து விட்டனவா?

இல்லைமா... ஜூலை 1ம் தேதி தானே பிறந்த நாள். ஜூன் கடைசி வாரம் போய் தான் வாங்குவேன். பேன்ட், அண்ணாசாலை, 'ரெய்மென்ட்'ஸ் கடையிலிருந்து தான் வாங்குவேன். உள்ளாடை, சாக்ஸ் எல்லாமே அங்கிருந்து தான்; ஒவ்வொன்றும், 30 வாங்குவேன். ஆண்டுக்கு, 12 முறை மட்டுமே போடுவேன்!

    

டி. செல்வன், ராமநாதபுரம்: தி.மு.க., அரசின் சாதனைகளைச் சொல்லி, 'தினமலர்' இதழில், முழுப்பக்க விளம்பரம், முதல் பக்கத்தில் வெளியிட்டு, ஓட்டு கேட்கிறாரே, ஸ்டாலின்...

'தினமலர்' நடுநிலை நாளேடு என்பதும், அதன் வாசகர்கள் நடுநிலையானவர்கள் என்பதும், ஸ்டாலினுக்கு தெரியும். நடுநிலை வாக்காளர்களின் ஓட்டுக்களை இழுக்க, இப்படி செய்திருக்கிறாரோ என, எண்ணத் தோன்றுகிறது!

    

ஆர். மகாதேவன், நெல்லை: சேமிப்பை எந்த வயதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்?

சிறு வயதில், அம்மா, அப்பா தரும் காசை, உண்டியலில் சேமிப்பதிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும்!

    

வி. பாண்டி துரை, கோவை: பணக்காரர் என்பவர் யார்?

வருவாய்க்கு குறைவாக செலவு செய்பவரே, பணக்காரர்!     

* டி. சிந்தாமணி, திருப்பூர்: வெற்றிகரமான வாழ்க்கை என்றால் என்ன?

வீசுகிற வாசனையைப் பொறுத்து தான், மலர்கள் மதிக்கப்படுகின்றன. பேசுகிற வார்த்தையைப் பொறுத்து தான், மனிதர்கள் மதிக்கப்படுகின்றனர். எனவே, நம்மை சரிப்படுத்திக் கொள்ள வேண்டும்; ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும்; முழுமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவே, வெற்றிகரமான வாழ்க்கை!

    

வி. அர்ஜுனன், திட்டக்குடி: தன் வாழ்வில் இன்பம் மறைந்து விட்டது என்கிறானே, என் நண்பன்...

அறியாமை இருக்கிறது அவரிடம்... அறியாமை என்பது விஷப் பூச்சி. அது, மனதில் புகுந்து விட்டால், இன்பம் மறைந்து விடும்!  





      Our Apps Available On




      Dinamalar

      Follow us