PUBLISHED ON : மார் 10, 2024

உன் ஒரே ஒரு
மன்னிப்பால்
துரோகியும் நண்பனாவான்!
ஒரே ஒரு இன்சொல்லால்
வேண்டாதவர் கூட
விருந்தாளியாவார்!
ஒரு சின்ன புன்னகையால்
ஓட நினைப்பவர்
உடன் வருவர்!
ஒரே ஒருவேளை
உணவளித்தால்
ஏழைக்கு தாயாவாய்!
ஆறுதல் வார்த்தையால்
நோயாளிக்கு
மருந்தாவாய்!
வீரிய வார்த்தையால்
தோற்றோருக்கு
குருவாவாய்!
அன்பான சொல்லால்
துயருருவோற்கு
துாணாவாய்!
இத்தனை வழிகள்
இறைந்து கிடைக்கையில்
நீ எப்படி
தனியாளாவாய்!
மாதவி, புதுபெருங்களத்துார்,செங்கல்பட்டு.
மன்னிப்பால்
துரோகியும் நண்பனாவான்!
ஒரே ஒரு இன்சொல்லால்
வேண்டாதவர் கூட
விருந்தாளியாவார்!
ஒரு சின்ன புன்னகையால்
ஓட நினைப்பவர்
உடன் வருவர்!
ஒரே ஒருவேளை
உணவளித்தால்
ஏழைக்கு தாயாவாய்!
ஆறுதல் வார்த்தையால்
நோயாளிக்கு
மருந்தாவாய்!
வீரிய வார்த்தையால்
தோற்றோருக்கு
குருவாவாய்!
அன்பான சொல்லால்
துயருருவோற்கு
துாணாவாய்!
இத்தனை வழிகள்
இறைந்து கிடைக்கையில்
நீ எப்படி
தனியாளாவாய்!
மாதவி, புதுபெருங்களத்துார்,செங்கல்பட்டு.