Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/எல்லா பலனும் பகவானுக்கே!

எல்லா பலனும் பகவானுக்கே!

எல்லா பலனும் பகவானுக்கே!

எல்லா பலனும் பகவானுக்கே!

PUBLISHED ON : மார் 10, 2024


Google News
Latest Tamil News
தங்கள் ஆசைகளும், எண்ணங்களும் நிறைவேற, தத்தம் இஷ்ட தெய்வங்களை வழிபட்டு, பூஜிக்கின்றனர், மனிதர்கள். சாஸ்திர முறைப்படி, சிரத்தையுடன் செய்வது தான் உண்மையான பூஜையாகும்.

எல்லா தெய்வங்களும், பகவானின் அங்கங்கள் தான். பகவானே மற்ற எல்லா தெய்வங்களிலும் இருக்கிறார். அவரே அனைத்துக்கும் அதிபதி. பகவான் தான் அந்தந்த ரூபத்தில் தோற்றமளிக்கிறார்.

இதை அறியாமல், பகவான் வேறு, இஷ்ட தெய்வம் வேறு என்று எண்ணி, பயனில் பற்று வைத்து அந்த தெய்வங்களை பூஜிப்பது, விதிமுறையற்றது.

பகவான் எல்லா இடங்களிலும், எல்லாவித ஜீவன்களிலும் இருக்கிறார் என்ற எண்ணம் ஏற்பட வேண்டும். நாய், கழுதை, பறவைகள் போன்ற எல்லா ஜீவன்களிலும், பகவான் இருப்பதாக நினைக்க வேண்டும்.

அப்படி, பகவான் இவைகளில் இருந்தால், இதுபோன்ற ஜென்மாக்கள் ஏன் வரவேண்டும் என்றால், அது, அந்தந்த ஜீவன்கள் செய்துள்ள பாவ, புண்ணியங்களுக்கு தகுந்தபடி அமைகிறது.

ஒரு ஜீவன் பாவம் செய்ய, அதன் தலையெழுத்து காரணம். அந்த ஜீவன்களில், பகவான் சாட்சியாகத்தான் இருக்கிறார். அந்தந்த ஜீவன்கள், தங்கள் புண்ணிய, பாவங்களை அனுசரித்து, பிறவி எடுத்து, பலனை அனுபவிக்கிறது.

தலையெழுத்து என்பது எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்காது. பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப தானாகவே அமைகிறது.

நாயாக பிறந்தாலும், அதற்குள்ள சொற்ப புண்ணிய வசத்தால், பணக்காரர் வீடுகளில் வளர்ந்து, வேளா வேளைக்கு பாலும், பலகாரமும் சாப்பிடுகிறது. சில நாய்களுக்கு இன்னும் விசேஷமான பராமரிப்பு உள்ளது.

சில நாய்கள், தெருவில், குப்பைமேட்டில் படுத்து, எச்சில் பொறுக்குகிறது. ஏன் இந்த வித்தியாசம் என்றால், அவைகளின் பாவ, புண்ணிய பலன் தான் காரணம்.

தம்மிடம் வந்தவர்கள் அனைவரையும், பகவானுடைய சொரூபம் என்றே நினைத்தான், ரக்திதேவ மகாராஜன். அவர்களுக்கு அன்னதானம் செய்து, இதன் பலனில் பற்றுதல் இல்லாமலிருந்து, பகவானை அடைந்தார் என்ற கதை உள்ளது.

இந்த தான, தர்மம் செய்தால், இன்ன பலன் கிடைக்கும் என்று நினைக்காமல், எல்லாம் ஈஸ்வரார்ப்பணம் என்று, பகவானிடம் பலனை ஒப்புவித்து விட்டால், பற்றுகள் நீங்கி விடும்.

அப்படி செய்து விட்டால், அவர்களை ரட்சித்து விடுவார், பகவான். இதுதான் ஈஸ்வரார்ப்பணம் என்பது. இதில் சுயநலமிராது. மனம் தான் காரணம்!

பி.என்.பி.,





      Our Apps Available On




      Dinamalar

      Follow us