Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/பெண்கள் பாதுகாப்புக்கு பத்து வழிகள்!

பெண்கள் பாதுகாப்புக்கு பத்து வழிகள்!

பெண்கள் பாதுகாப்புக்கு பத்து வழிகள்!

பெண்கள் பாதுகாப்புக்கு பத்து வழிகள்!

PUBLISHED ON : மார் 03, 2024


Google News
Latest Tamil News
01. வாக்கிங், ஜாக்கிங், சாலையில் நடக்கும் போதோ அல்லது பேருந்து பயணத்திலோ, 'இயர்போன்' அணிந்து பாடல் கேட்கும்போது, 'வால்யூமை' சற்று குறைவாக வையுங்கள். பயணங்களின் போது, போன் பேச்சுகளிலோ, பாடல்களிலோ மூழ்கிவிடாத படி, ஜாக்கிரதையாக இருங்கள்.

02. வீட்டிலிருந்து வெளியே புறப்படும் போது, உங்களுடைய மொபைலில், 'சார்ஜ்' முழுவதுமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். 'சார்ஜ்' இறங்கும் வரை அதிகம் பயன்படுத்தாமல், வீடு திரும்பும் வரை இருக்கும்படி பயன்படுத்துங்கள். ஏனெனில், உங்களுடன் இருக்கும் ஒரே பாதுகாப்பு மொபைல் போன் தான்.

03. உங்களுடைய வீட்டின் கதவில், 'ஐ ஹோல்ஸ்'  மற்றும்  செயின் மாட்டுவது நல்லது. கதவை யார் தட்டினாலும், முழுவதுமாக திறக்காமல், யார் என அறிந்து பிறகு திறங்கள்.

04. நம் மொபைலில், 'பாஸ்ட் டயலிங்' மற்றும் 'எமர்ஜென்சி டயல்' செயல்பாடுகள் இயல்பாகவே இருக்கும். இவை, மொபைலில், 'ஸ்கிரீனை லாக்' செய்தாலும் இயங்கக் கூடியவை. இந்த 'அப்ளிகேஷனில்' உங்களுடைய, அப்பா, அண்ணன், கணவர், நண்பர் மற்றும் போலீஸ் எமர்ஜென்சி எண்களான, 100, 1091 மற்றும் பெண்கள் பாதுகாப்புக்காக, 1096, 112 என்ற 'ஆன்டி ஸ்டாக்லிங்' எண்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.

05. உங்கள் நம்பிக்கைக்கு உரியவர்களுடன் மட்டுமே வெளியில் செல்லுங்கள். நேரம் மிச்சப்படுத்த வேண்டும் என்று, ஆள் நடமாட்டம் இல்லாத சந்துகளிலோ, பாதைகளிலோ செல்வதை தவிருங்கள்.

06. 'பெப்பர் ஸ்பிரே' ஒன்றை, அது வேலை செய்கிறதா என்பதை பரிசோதித்து, உடனே எடுப்பது போல், உங்கள் கைப்பையில், எப்போதும் வைத்திருக்கலாம். யாராவது உங்களிடம் தவறாக நடந்து கொண்டால், இதை அவர்களின் கண்களில் படும்படி அடியுங்கள். இதனால், அவர்களின் கண்கள் மற்றும் தொண்டையை பாதித்து, நிலைகுலைய செய்யும். நீங்களும் எளிதில் தப்பிக்கலாம்.

07. இலவச, 'நெட்' தேவைப்படும் பட்சத்தில், உடனிருக்கும் நண்பர்களின் மொபைல் போன் மூலம், 'ஹாட் ஸ்பார்ட் ஆன்' செய்து பயன்படுத்துங்கள். விமான நிலையம், பேருந்து நிலையம், ரயில் நிலையம், ஹோட்டல்கள் மற்றும் மால்ஸ் போன்ற பொதுவெளியில் கொடுக்கும் இலவச வைபைகளை தயவு செய்து பயன்படுத்தாதீர்.

08. கால்டாக்சிகளில் பயணம் மேற்கொள்ள நேர்ந்தால்,   உங்களுடைய மொபைலில் நீங்கள் பயன்படுத்தும் அந்த, 'கால்டாக்ஸியின் ஆப்'பின் மேல் ஓரத்தில், 'ஷேர்' என்ற, 'ஆப்ஷனை' பயன்படுத்தி, நீங்கள் சென்று கொண்டிருக்கும் வாகனம், சென்று சேரும் நேரம், துாரம் குறித்து உங்களுடைய அம்மா, அப்பா, அண்ணன் மற்றும் நண்பர்களுக்கு தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள். இவ்வாறு செய்வது உங்களுக்கு எப்போதும் பாதுகாப்பை தரும்.

09. 'வாட்ஸ் அப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களில் நாம் தினமும், 'ஸ்டேட்டஸ்' போடாத பக்கங்களே இல்லை. பதிவுகள் போடுவது தவறில்லை. ஆனால், நான் இங்கு புறப்படுகிறேன், இங்கு இருக்கிறேன் என்ற, 'லைவ் அப்டேட்'களை போடாமல், 'இந்த இடம் சென்று வந்தேன்...' என்று மட்டும் போடுங்கள். ஏனெனில், பல சைபர் குற்றங்களுக்கு இந்த, 'லைவ்' பதிவுகள் தான் முக்கிய காரணமாக உள்ளன. மன கஷ்டம், சோகங்கள் ஏற்படும் போது, 'ஸ்டேட்டஸ், வீடியோ' மற்றும் புகைப்படங்களை பதிவிடாதீர். இதனால், எதுவும் மாறிவிடப் போவதில்லை. உங்களுடன் சிலர், எளிதாக பழக இந்த பதிவுகள் வழிவகுத்துவிடும். நம் கஷ்டம் மற்றும் சோகமான நேரங்களில் நமக்கு ஆறுதல் கூறுபவர்களை, மனம் நல்லவராகவே காட்டும். இது மனதின் இயல்பு; இதுவே நமக்கு ஆபத்தை விளைவிக்கும்.

10.  உங்களுக்கு, எது நேர்ந்தாலும், முதலில் அதை தைரியமாக எதிர்கொள்ளுங்கள். எதை கண்டும் அஞ்ச வேண்டாம். யாராவது தவறாக நடக்க முயன்றால், அவரை கண்டு பயப்படாமல், முறைத்து பாருங்கள். ஏனென்றால், பெண்ணின் மொத்த சக்தியும், அவர்களின் கண் பார்வையில் தான் வெளிப்படும். எதிர் நிற்பவரை தள்ளிப் போகச் செய்யும் அளவுக்கு சக்தி அந்த பார்வைக்கு உண்டு.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us