Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல....

இதப்படிங்க முதல்ல....

இதப்படிங்க முதல்ல....

இதப்படிங்க முதல்ல....

PUBLISHED ON : மார் 03, 2024


Google News
Latest Tamil News
‛நோ என்ட்ரி போர்டு' மாட்டிய, விஜய்!

நடிகர் விஜய், அரசியல் கட்சி துவங்கி விட்டார் என்றதும், அவரது கட்சியில் இணைந்து, முக்கிய பொறுப்புகளை கைப்பற்ற, பல பிரபலங்களும், அவரை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், விஜயோ, 'என் கட்சியை பொறுத்தவரை, என்னுடைய ரசிகர்களுக்கே அனைத்து பொறுப்புகளும் வழங்கப்படும். அவர்களே, எனக்காக உண்மையாக உழைப்பர். என்னுடைய பாதையில் என் கொள்கையை பின்பற்றி உறுதியாக பயணிப்பர்...' என்று சொல்லி, புதிய நபர்களுக்கு, 'நோ என்ட்ரி போர்டு' மாட்டி விட்டார், விஜய்.

— சினிமா பொன்னையா

சேனல் துவங்கும் சமந்தா!

சினிமா உலகை சேர்ந்த, நடிகர் - நடிகையர் பலரும், 'யு டியூப்' சேனல்கள் துவங்கி, லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை சமந்தாவும், விரைவில், சேனல் ஒன்றை துவங்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.

அந்த சேனலுக்கு, 'பேக்- 20' என்று பெயர் வைத்திருப்பவர், 'அதில், உடல்நலம் சார்ந்த பல ஆரோக்கிய, 'டிப்ஸ்'களை கொடுக்க திட்டமிட்டுள்ளேன்...' என்கிறார்.

— எலீசா

'வதந்தி பரப்பாதீர்கள்-' ஸ்ரீதிவ்யா வேண்டுகோள்!

பல ஆண்டுகளாக, பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்த, ஸ்ரீதிவ்யா, தற்போது, கார்த்தி நடிக்கும், 27வது படத்தில் நடிக்க, ஒப்பந்தமாகி உள்ளார். ஆனால், இப்படத்தில் ஸ்ரீதிவ்யாவுக்கு, 'டம்மி'யான தங்கை வேடம் என்றும், ஒரு கன்னட நடிகை தான், கார்த்திக்கு ஜோடியாக நடிப்பதாகவும், கோலிவுட்டில் ஒரு செய்தி பரவியது.

இதையடுத்து, ஸ்ரீதிவ்யா வெளியிட்டுள்ள செய்தியில், 'கார்த்தி படத்தில் எனக்கு, தங்கை வேடம் தான். இருப்பினும், கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கிறேன். 'ஹீரோயினை' விட, அந்த படத்தில் தங்கை வேடம் தான் அழுத்தமானது. இந்த உண்மை தெரியாமல், 'டம்மி'யான ரோலில் நடிப்பதாக, யாரும் தவறான செய்தியை பரப்ப வேண்டாம்...' என்று, கூறியுள்ளார்.

எலீசா

வடிவேலுவை விமர்சிக்கும், குண்டு ஆர்த்தி!

வடிவேலுவுடன், அருள், கிரி, கச்சேரி மற்றும் கத்தி சண்டை உட்பட, பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்தவர், குண்டு ஆர்த்தி.

இவர் கூறுகையில், 'வடிவேலுவை பொறுத்தவரை, தன்னைத் தவிர யாருமே நன்றாக நடிக்க கூடாது என்று தான் நினைப்பார். ஆனால், அதையும் மீறி யாராவது நன்றாக நடித்து விட்டால், அடுத்த படத்தில் அவர்களுக்கு வாய்ப்பு தர மாட்டார்.

'அப்படித்தான் ஒரு படத்தில் நடித்தபோது, என் நடிப்பு பாராட்டு பெற்றது. அந்த படத்திற்கு பிறகு, எனக்கு வாய்ப்பு கொடுப்பதை அடியோடு நிறுத்தி

விட்டார், வடிவேலு...' என்கிறார், குண்டு ஆர்த்தி.

 எலீசா

பொறாமையில், 'ஹீரோ'கள்!

சந்தானத்திற்கு பிறகு, முன்னணி காமெடியனாக இருந்த, சூரி, பல பிரபல நடிகர்களின் படங்களில், காமெடி வேடங்களில் நடித்தார். விடுதலை படத்திற்கு பின், அவரே அடுத்தடுத்து, 'ஹீரோ'வாக நடிக்க துவங்கி விட்டதால், காமெடியனாக நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார்.

'ஹீரோ'வாக சூரி, தொடர்ந்து நடித்து வரும் நிலையில், ஒரு காலத்தில், அவருடன் நெருக்கமான நண்பர்களாக இருந்த, 'ஹீரோ'களே, இப்போது அவரை தொழில் முறை போட்டியாளராக பார்க்க துவங்கி விட்டனர்.

இதனால், 'ஹீரோவானதால், என் நட்பு வட்டார நடிகர்களை இழந்து விட்டேன்...' என்கிறார், சூரி.

— சினிமா பொன்னையா

கறுப்புப் பூனை!

கடந்த சில மாதங்களுக்கு முன், இரண்டாவது திருமணம் செய்து கொண்ட, கேரளத்து பால் நடிகை, தற்போது, தன் மொபைல் எண்ணை அவசர கதியில் மாற்றி இருக்கிறார்.

கடந்த காலங்களில், பல, 'பாய் பிரண்டு'களுடன், அம்மணி ஜாலியாக திரிந்ததால், பழைய ஞாபகத்தில், திருமணத்திற்கு பிறகும், அவருக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். இந்த விவகாரத்தால், குடும்ப வாழ்க்கையில் புயல் வீச துவங்கி விடும் என்று, பயந்து போன நடிகை, திடீரென்று, தன் மொபைல் எண்ணையே மாற்றி விட்டார். அதோடு, புதிய எண்ணை, சினிமா வட்டாரத்தில் யாருக்கும் தெரியாமல், ரகசியமாக வைத்திருக்கிறார்.

சினி துளிகள்!

* சமீபத்தில், இரண்டாவது திருமணம் செய்து கொண்ட, நடிகை அமலாபால், 'குழந்தை பெற்றெடுத்த பின், மீண்டும், சினிமாவில் நடிப்பேன்...' என்று, கூறியுள்ளார்.

* சிவகார்த்திகேயன் நடித்து வரும், 21வது படத்திற்கு, அமரன் என்று, 'டைட்டில்' வைத்துள்ளனர். இந்த படத்தில், அவர், தமிழகத்தைச் சேர்ந்த, வீர மரணம் அடைந்த, ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வேடத்தில் நடித்து

வருகிறார்.

அவ்ளோதான்!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us