Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

PUBLISHED ON : மார் 03, 2024


Google News
Latest Tamil News
எம். முகுந்த், கோவை: உங்களுக்கு ஆண் வாசகர்கள் அதிகமா, பெண் வாசகியர் அதிகமா?

இரண்டு பேருமே சரி சமவிகித அளவிலேயே உள்ளனர்!             

சி. லட்சுமி, சென்னை: உடல் நலம் சரி இல்லாதவர்கள் தான், மருந்து, மாத்திரை சாப்பிடுகின்றனர். அதையும் ஏன் கசப்பாக இருக்கும்படி தயார் செய்கின்றனர்... ஏன் இந்த கொடுமை?

தொண்டையில் நேரடியாக போட்டு, தண்ணீர் குடித்தால், அதன், 'டேஸ்ட்' எல்லாம் தெரியாதே!

டபிள்யூ. ரோமேரோ, நெல்லை: முகமறியா, அந்துமணியின் முகமே முகவரியானது குறித்து...

தபால் துறையினர் கெட்டிக்காரர்கள். அதனால், அவர்களுக்கு, அந்துமணியின் முகமும், முகவரியும் தெரிந்திருக்கிறது. எனவே, கடிதங்கள் எனக்கு வந்து சேர்கின்றன!

க. கல்பனா, சென்னை: 'வரும், லோக்சபா தேர்தலில், மகளிருக்கு, ஏழு தொகுதிகள் ஒதுக்கப்படும்...' என, முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பது, அவர் குடும்பம் மற்றும் அமைச்சர்கள் குடும்ப மகளிருக்கா அல்லது தி.மு.க., அடிமட்ட மகளிர் அணி தொண்டர்களுக்கா?

அடிமட்ட மகளிர் அணி தொண்டர்கள், அப்படியே தான் இருக்கப் போகின்றனர்... தொகுதி ஒதுக்கீடு அறிவிப்பு வெளியாகும் வரை, காத்திருந்து பாருங்களேன்!

           

* மு. விஜயராணி, எஸ்.கொடிக்குளம், ராமநாதபுரம்: நன்கு படித்தவர்கள் கூட, இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது, தலையில், 'ஹெல்மெட்' அணிவது இல்லையே, ஏன்?

'ஹெல்மெட்' அணிவதால் அவர்களுக்கு ஏதோ இடைஞ்சல் இருப்பதாக கருதி, தவிர்க்கின்றனர். அந்த இடைஞ்சலை போலீசாரால் மட்டுமே தடுக்க முடியும்; போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், 'ஹெல்மெட்' அணிவது கட்டாயமாகும்; விபத்துகளில், இறப்பை தடுக்க முடியும்!

* கே. சிந்தாமணி, மதுரை: பொறுமை இருந்தால் போதும் என்கிறானே, என்நண்பன். இது சாத்தியமா?

உங்களுக்கு துன்பம் இருக்கிறதா? அது, பொறுமையைத் தரும்; பொறுமை இருந்தால், அனுபவத்தைத் தரும்; அந்த அனுபவம், நம்பிக்கையைத் தரும்; நம்பிக்கை, பலத்தை தரும்; பலம், நம்பிக்கையை உருவாக்குகிறது.

நம் சக்தி, மேலும், மேலும் பெருக வேண்டும் என்றால், துன்பத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். எதையும் தாங்கும் இதயம் வேண்டும்!

என். விக்னேஷ், நாகர்கோவில்: என் வருமானத்திற்கு ஈடாக செலவு செய்கிறேனே...

சிக்கனமாக இல்லாதவர், சாமர்த்தியசாலியாக இருக்க முடியாது; சாதுர்யமாக குடும்பம் நடத்தவும் முடியாது. அதனால், இனிமேல் கவனமாக செலவு செய்யுங்கள்!    





      Our Apps Available On




      Dinamalar

      Follow us