Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/நம்மிடமே இருக்கு மருந்து! - வெல்லம்!

நம்மிடமே இருக்கு மருந்து! - வெல்லம்!

நம்மிடமே இருக்கு மருந்து! - வெல்லம்!

நம்மிடமே இருக்கு மருந்து! - வெல்லம்!

PUBLISHED ON : பிப் 25, 2024


Google News
Latest Tamil News
சர்க்கரைக்கு மாற்றாக கருதப்படுகிறது, வெல்லம்.

குளிர்காலத்தில், உடலுக்கு சூட்டை கொடுக்கக் கூடியது. பல சத்துக்கள் வெல்லத்தில் இருக்க, சர்க்கரையை போல சுத்திகரிக்கப்படாததே காரணம்.

புரதம், கால்ஷியம், வைட்டமின் பி12, இரும்புச்சத்து என, பல வகையான சத்துக்கள் வெல்லத்தில் உள்ளது. உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது.

இரவு உணவுக்கு பிறகு, சிறிது வெல்லத்தை உட்கொள்வதை வழக்கமாக கொண்டால், ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

வெல்லத்தை உண்பதால், ஏற்படும் நன்மைகள்:

* வயிற்றில் வாயு உருவாவதையும், செரிமானம் தொடர்பான பிரச்னைகளை தீர்க்கிறது.

* குளிர்காலத்தில் அல்லது ஜலதோஷத்திற்கு அமிர்தமாக பயன்படுகிறது, வெல்லம். இதிலுள்ள வெப்பத்தன்மை காரணமாக, சளி மற்றும் இருமல் ஆகியவற்றிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். பால் அல்லது தேநீரில் கலந்து பருகலாம். மேலும், எலுமிச்சை, இஞ்சி சாறில் வெல்லம் சேர்த்த பானமாக தயாரித்து குடிக்கலாம்.

* தினமும், சிறிதளவு வெல்லம் சாப்பிட்டு வந்தால், முகப்பருக்கள் வராமல், சருமம் பளபளக்கும். சரும ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளது.

* இதிலுள்ள பொட்டாஷியம், இதயம் தொடர்பான நோய்களைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதய நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும், சர்க்கரை. எனவே, வெல்லம் சாப்பிடுவது நன்மை பயக்கும்.

* மலச்சிக்கல் பிரச்னை ஏற்பட்டால், இரவு உணவுக்கு பின், ஒரு துண்டு வெல்லம் சாப்பிட்டு வந்தால், அதிலிருந்து விடுபடலாம்.

* வெல்லத்தை, இஞ்சியுடன் சேர்த்து சூடாக்கி, வெதுவெதுப்பாக சாப்பிடுவது தொண்டை புண்ணுக்கு சிறந்த மருந்து. இதன் மூலம், குரலின் தன்மை சிறப்பாக இருக்கும். தினமும் ஒரு துண்டு வெல்லத்துடன் இஞ்சி சேர்த்து சாப்பிட்டு வந்தால், மூட்டு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

* ஒவ்வொரு நபரும் தினமும், சுமார், 20 கிராம் வெல்லத்தை உட்கொள்ளலாம்.

எம்.ஏ. நிவேதா.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us