Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/நம்மிடமே இருக்கு மருந்து - பட்டாணி!

நம்மிடமே இருக்கு மருந்து - பட்டாணி!

நம்மிடமே இருக்கு மருந்து - பட்டாணி!

நம்மிடமே இருக்கு மருந்து - பட்டாணி!

PUBLISHED ON : பிப் 11, 2024


Google News
Latest Tamil News
உலகில், மனிதர்களால் முதன் முதலில் பயிரிடப்பட்ட தானியம், பட்டாணி.

உலர வைத்து பயன்படுத்த ஏதுவான தானியம் என்பதால், பட்டாணியை தொல்குடி மக்கள் பரவலாக பயன்படுத்தினர். வணிகர்களும், யாத்ரீகர்களும் இதை சேமித்து, வழிப் பயணங்களில் எடுத்துச் சென்றனர். இப்படித்தான் பல நாடுகளுக்கும் பரவியது பட்டாணி.

* துவக்கத்தில், அரச வம்சத்து உணவாக மட்டுமே இருந்தது, பட்டாணி. இதில், 1,300 இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மக்கள் பெருவாரியாக பயன்படுத்துவது, தோட்ட பட்டாணி வகையை சேர்ந்தது

* ஊட்டச்சத்து நிறைந்த தானியங்களில், பட்டாணியும் ஒன்று. அசைவ உணவுகளில் கிடைக்கும் அதே அளவு புரதச்சத்து, பட்டாணியிலும் உண்டு

* இன்று, சீனா, ரஷ்யா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், பட்டாணி அதிகம் விளைவிக்கப்படுகிறது. உலகில் அதிகம் பட்டாணியை இறக்குமதி செய்வதும், நம் நாடு தான். இந்தியாவில், அசாம், பஞ்சாப், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள், பட்டாணி சாகுபடியில் முன் நிற்கின்றன

* கார்போஹைட்ரேட், இயற்கையான சர்க்கரை, புரதம், பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ, இ, சோடியம் மற்றும் இரும்பு என, உடலுக்கு தேவையான சத்துகள் பட்டாணியில் இருக்கிறது.

ஒரு நாளைக்கு நம் உடலுக்கு தேவைப்படும் இரும்புச்சத்தில், 16 சதவீதத்தை, ஒரு கப் பட்டாணியில் பெற முடியும். நார்ச்சத்து அதிகம் இருப்பதால், குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது.

உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை தடுக்கும் ஆற்றலும் பட்டாணிக்கு உண்டு. பார்வைத்திறன் மேம்பாட்டுக்கு பெரிதும் உதவுகிறது.

உடம்புக்குள் உள்ள புண்களை ஆற்றுவதிலும், உதவி செய்கிறது. வாயுக் கோளாறுகளை அகற்றுவதோடு, மனநலனையும் காப்பதாக கண்டறிந்துள்ளனர்.

காய்ந்த பட்டாணியை விட, பச்சை பட்டாணியில் தான் சத்துகள் அதிகம்.

பச்சை நிறம் சேர்த்து, பாக்கெட்டில் அடைத்து வைக்கும் பட்டாணியை வாங்காதீர்கள்.

தோலுடன் இருக்கும், 'பிரஷ்'ஆன பட்டாணியை வாங்கி, பயன்படுத்துவதே நல்லது. 

- அமுதா அசோக்ராஜா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us