Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

PUBLISHED ON : பிப் 11, 2024


Google News
Latest Tamil News
விஜய் மறுப்பு!

தமிழக அரசியலை பொறுத்தவரை, யார் புதிய கட்சி ஆரம்பித்தாலும், திராவிட கட்சிகள், அவர்களை, தங்கள் பக்கம் இழுத்து, வளர்ச்சிக்கு, முட்டுக்கட்டை போட்டு விடுவர். இந்நிலையில் தான், தற்போது கட்சி பெயரை அறிவித்துள்ள, விஜய்க்கும், ஒரு முக்கிய திராவிட கட்சியிடமிருந்து அழைப்பு சென்றுள்ளது.

அவருக்கு வாழ்த்து சொல்லும் சாக்கில், 'தனித்து தேர்தலை சந்திப்பது ரொம்ப, 'ரிஸ்க்!' அதனால், வரும் சட்டசபை தேர்தலில், நாமெல்லாம் கூட்டணி அமைத்து, தேர்தலை சந்திப்போம்...' என்று, சில ஆசை வார்த்தைகளை அள்ளி விட்டுள்ளனர்.

ஆனால், விஜயோ, 'ஊழல் கட்சிகளை ஒழிப்பதற்காக தான், நான் அரசியலுக்கு வருகிறேன். அப்படி இருக்கும்போது, ஊழல் கட்சியுடன் கூட்டணி வைப்பேனா...' என்று சொல்லி, 'டீல்' போட வந்தவர்களை துரத்தி அடித்து விட்டாராம்.

— சினிமா பொன்னையா

மீண்டும் எமி ஜாக்சன்!

மதராசபட்டினம், தெறி மற்றும் 2.0 உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர், லண்டன் நடிகை, எமி ஜாக்சன். திருமணம், குழந்தை பிறப்புக்கு பிறகு, ஆறு ஆண்டுகள் கழித்து மீண்டும், மிஷன் சாப்டர்-1 படம் மூலம், 'என்ட்ரி' கொடுத்திருக்கிறார்.

கோலிவுட்டில் விட்ட இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக, தீவிரம் காட்டி வரும், எமி ஜாக்சன், 'நெகட்டிவ் ரோல்'கள் மற்றும் வில்லி வேடங்கள் கிடைத்தாலும் கூட, நடிக்க தான் தயாராக இருப்பதாக, சில முக்கிய இயக்குனர்களை துரத்தி வருகிறார்.

 எலீசா

த்ரிஷாவுக்கு முக்கியத்துவம்!

லியோ படத்தில், விஜயின் மனைவியாக நடித்த, த்ரிஷா, தற்போது, விடாமுயற்சி படத்தில், அஜித்தின் மனைவியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில், முதலில், த்ரிஷாவுக்கு குறைவான காட்சிகளே இருந்துள்ளது. இது குறித்து, அஜித்திடம் தெரிவித்தார், த்ரிஷா.

இயக்குனர் மகிழ்திருமேனியை அழைத்து, 'த்ரிஷாவின் மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால், அவருக்கு கூடுதல் காட்சிகள் வையுங்கள். அவரது கதாபாத்திரத்தை, கதையில் திருப்புமுனை ஏற்படுத்த கூடியதாக உருவாக்குங்கள்...' என்று, 'ஆர்டர்' போட்டுள்ளார், அஜித்குமார்.

இதனால், அவசரகதியில், த்ரிஷாவின் கேரக்டரை முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றியுள்ளார், மகிழ்திருமேனி.

எலீசா

வேலு நாச்சியாராக, ஸ்ருதிஹாசன்!

கவர்ச்சிகரமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருபவர், ஸ்ருதிஹாசன். தற்போது, முதல் சுதந்திரப் போராட்ட பெண் வீராங்கனை, வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் படத்தில் நடிக்க போகிறார்.

முதல் முறையாக, சரித்திர கதாபாத்திரத்தில் நடிப்பதால், உற்சாகத்தில் இருக்கும் ஸ்ருதிஹாசன், தற்போது, வாள் சண்டை, குதிரை ஏற்றம் உள்ளிட்ட பல மன்னர் காலத்து போர் பயிற்சிகளில் தீவிரமடைந்திருக்கிறார்.

— சினிமா பொன்னையா

கறுப்புப் பூனை!

மெகா சரித்திர படத்தில் நடித்தபோது, பாகுபலி நாயகனுக்கும், அப்பட நாயகியான, அருந்ததி நடிகைக்கும் இடையே, காதல் இருப்பதாக செய்திகள் வெளியானது; இருவருமே கோரசாக மறுத்தனர்.

அவர்கள் இருவருக்கும் இடையே காதல் இருக்கிறது. இப்போது வரை அவர்கள் ரகசியமாக அடிக்கடி சந்திப்பு நடத்துகின்றனர் என்று, டோலிவுட்டில் செய்தி புகைந்து வருகிறது. இருவரும், ஹைதராபாத்திலுள்ள, 'ஸ்டார் ஹோட்டலில்' அடிக்கடி சந்தித்து வருகின்றனர். அதன் காரணமாகவே, மேற்படி நடிகையும், திருமணம் செய்து கொள்ளாமல், நடிகருக்காக காத்துக் கொண்டிருப்பதாக கிசுகிசுக்கின்றனர்.

திருமணம், குழந்தை பிறப்புக்கு பிறகும், கோலிவுட்டில் முகாமிட்டு, தீவிர பட வேட்டை நடத்தி வருகிறார், அகர்வால் நடிகை. ஆனால், அபிமானத்திற்குரிய, 'ஹீரோ'கள் யாரும் அவரை ஏறெடுத்து பார்க்காத நிலையிலும், சில இளவட்ட இயக்குனர்கள், அவர் பக்கம் சாய்ந்துள்ளனர். அதில் சிலர், அவரது ரசிகர் என்று சொல்லிக் கொண்டு, அகர்வாலை, 'இம்ப்ரஸ்' பண்ணி வருகின்றனர்.

எனவே, இனிமேல் நடிகர்களை நம்பி பலனில்லை என்று, இளவட்ட இயக்குனர்களுடன், 'டீல்' போட்டு புதுப்படங்களை கைப்பற்ற திட்டமிட்டுள்ளார், அகர்வால் நடிகை. மாதம் இருமுறை மும்பையிலிருந்து, சென்னை வந்து, மேற்படி இளவட்டங்களுக்கு சரக்கு, 'பார்ட்டி' கொடுத்து சீக்கிரமே படப்பிடிப்பை துவங்குமாறு உற்சாகப்படுத்துகிறார்.

சினி துளிகள்!

* பிரபாசுடன், பாகுபலி படத்தில் நடித்த அனுஷ்கா, அடுத்தபடியாக, அவர், 'ஹீரோ'வாக நடிக்கும் படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்க பேச்சு நடத்தி வருகிறார்.

* கமலுடன், இந்தியன்- - 2 படத்தில், தனக்கு பெரிய, 'ரோல்' என்று சொல்லிவிட்டு, இப்போது, 'டம்மி' பண்ணிவிட்டதாக அபிமானிகளிடம் புலம்பியுள்ளார், காஜல் அகர்வால்.

* தன், 25வது படமான, ஜப்பான் மிகப்பெரிய மொக்கை படமாக அமைந்து விட்டதால், தற்போது இயக்குனர்களிடம் முன்பு போல் அல்லாமல், துருவி துருவி கதை கேட்க துவங்கி இருக்கிறார், கார்த்தி.

அவ்ளோதான்!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us