PUBLISHED ON : பிப் 11, 2024

முன்கதை சுருக்கம்: தனக்கு கொடுக்கப்பட்ட இரண்டாவது, 'அசைன்மென்ட்'டுக்காக, நண்பன் குமாருடன் கீழனுார் கிராமத்துக்கு சென்றான், தனஞ்ஜெயன்.
'கார்த்திகா இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனர் கார்த்திகாவிடம் கூறி, குமாருக்கு, அதே நிறுவனத்தில், 'டிரைவர்' பணியில் சேர்ப்பிப்பதாகவும், தன்னுடன் ஒத்துழைக்கும்படியும் கூறினான், தனஞ்ஜெயன்.
விவேக் பற்றியும், மேலோட்டமாக கூறி, மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி வேண்டினான்.
கீழனுார் கிராமத்திலுள்ள சிவன் கோவிலில் தர்மகர்த்தா சதாசிவம், குமாரின் தாய் மாமா என்று அறிந்து, அவரை சந்திக்க குமாரும், தனஞ்ஜெயனும் சென்றனர். அப்போது, அவர் வீட்டில் நாக பாம்பு ஒன்று ஊர்ந்து வந்தது.
குமாரின் மாமா சதாசிவம், நாக பாம்புக்கு கற்பூர ஆரத்தி காட்டவும், அதுவும் நின்று படம் விரித்து, பார்த்தது. தனஞ்ஜெயனுக்கோ பெரிதும் வியப்பு.
கற்பூரத்தட்டை கீழே வைத்துவிட்டு, அப்படியே சாஷ்டாங்கமாக அதன் முன் விழுந்து வணங்கினார், சதாசிவம்.
நாகமும் அஞ்சி ஓடாமல், சீறாமல், அவர் வணங்குவதை பார்த்து, பின், மெல்லத் தவழ்ந்து, ஊர்ந்து வெளியேறியது.
'அப்பாடா...' என்று பெருமூச்சு விட்டார், சதாசிவம் மாமா.
''என்ன மாமா, இது வினோதமா இருக்கு. எனக்கு, அந்த காலத்து, ராமநாராயணன் சினிமா பார்த்த மாதிரியே இருக்கு?'' என்றான், குமார்.
''இருக்கும்பா இருக்கும். நீ பட்டணத்தவன் பாரு. உனக்கு, இந்த ஊரைப் பத்தி எல்லாம் தெரியாது,'' என்று சொல்லி, நாற்காலியில் அமர்ந்தார், சதாசிவம்.
''நான் பாம்புப் பற்றி கேட்டா, நீங்க ஊரைப் பற்றி பேசறீங்களே, மாமா,'' என்றான், குமார்.
''இது, நம் சிவன் கோவில் பாம்பு. ஊருக்குள்ள இதை எங்க வேணா பார்க்கலாம். இது, யாரையும், எதுவும் செய்யாது. பிரதோஷ வேளையில், கோவிலுக்குள்ள இருக்கிற லிங்கம் மேலயே ஏறி படம் எடுக்கும். அப்படிப்பட்ட பாம்பு தான், இப்ப இங்கேயும் வந்துச்சு. அதான் கற்பூரம் காட்டி கும்பிட்டேன்,'' என்றார், மாமா.
''நிஜமாவா மாமா?'' என்றான், குமார்.
''கண்ணால நேர்ல பார்த்துட்டு நெஜமாவான்னு கேட்டா எப்படிப்பா?''
''அப்படின்னா, 'டிவி'காரங்க கேமராவை துாக்கிக்கிட்டு வந்து, 'நியூஸ்'ல திரும்ப திரும்ப போட்டு, 'ரேட்டிங்' பார்த்திருப்பாங்களே.''
''வந்தாங்கப்பா. ஆனா, அவங்க வர்றப்ப இந்த பாம்பு வரமாட்டேங்குது. அவங்க போனதும் தான் வருது.''
''பாம்புக்கு காது கேட்காது. நம்பள மாதிரி ஆறறிவும் கிடையாது. அது, பாலும் குடிக்காது. ஆனா, நீங்க என்னமோ அது எல்லாம் தெரிஞ்சு நடக்கற மாதிரி சொல்றீங்களே மாமா,'' என்றான், குமார்.
''ஆமாம், குமார். நானும் புத்தகங்கள்ல படிச்சிருக்கேன். ஆனா, இப்ப நீ நேர்ல பார்த்ததும், நான் விழுந்து கும்பிடவும், அது பயந்து, சீறிச்சா? பேசாம தானே போச்சு,'' என்றார், சதாசிவம்.
மாமாவின் கேள்விக்கு அடுத்து என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், யோசிக்க துவங்கினான், குமார்.
''ஐயா, இப்படி நல்ல பாம்பு வந்து வழிபாடு பண்ணுற கோவில்லதானே, நடராஜர் சிலை களவு போச்சு?'' என்றான், தனஞ்ஜெயன்.
''ஆமாங்க. ஆனா, அது நடந்து ஐந்து ஆண்டுகள் இருக்கும். ஆமா, எதுக்கு கேட்டீங்க?'' என்றார், மாமா.
''இல்ல, இந்த பாம்பு, அப்ப நடராஜர் சிலைகிட்ட இருந்திருந்தா, திருடர்களால திருட முடிஞ்சிருக்குமா? அதான் கேட்டேன்,'' என்றான், தனா.
''நல்ல கேள்வியா தான் கேட்டிருக்கீங்க. நீங்க இப்ப கேட்கவும் தான் யோசிக்கிறேன். அதே சமயம், இந்த பாம்போட நடமாட்டம் இப்ப கொஞ்சம் காலமா தான் இருக்கு,'' என்றார், மாமா.
''சரி, அந்த சிலை அப்புறம் என்னாச்சுன்னு தெரியுமா?'' என்றான், தனா.
''காணாம போன எந்த சிலை கிடைச்சிருக்கு. ஆனா, ஒண்ணு... அந்த சிலையை திருடினவன் கை நிச்சயமா அழுகிப் போயிடும்,'' என்றார், சதாசிவம்.
மாமாவின் பதில், தனஞ்ஜெயனின் நெஞ்சில் குத்தியது.
''இவ்வளவு சக்தி உள்ள சாமி இருக்குற கோவில்ல எப்படி சார் திருட முடிஞ்சது?'' என்று, அடுத்த கேள்வியை கேட்டான், தனா.
''இதுக்கு எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல, இதே கேள்வியை, கோவிலுக்கு வந்த ஒரு சாமியார்கிட்ட நாங்க கேட்டோம். அவர் சொன்ன பதில், எங்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியம்,'' என்றார், மாமா.
''அப்படி என்ன சொன்னார் அவர்?'' என்றான், தனா.
''அந்த திருடன், சாமியை ரொம்ப மதிப்புள்ளவரா நினைச்சதால தான் திருடினான். திருட முடியும்ன்னு அவன் பூரணமா நம்பினான். அதனால, நம்பிக்கையுள்ள அவன்கிட்ட சாமி போயிட்டாரு. ஆனா, இங்க அவரை வெச்சு பிழைக்க பார்த்தீங்க.
''பக்தர்களை பிரிச்சு, காசு கொடுத்தா, முன்னால போய் கும்பிடலாம். இல்லாட்டி, துார நின்னு தான் கும்பிடணும்ன்னு ஒரு வியாபாரத்தை நடத்துனீங்க. அதான், உங்களை விட, அந்த திருடனே மேல்ன்னு அவன் கூட போயிட்டதா சொன்னார்.
''எங்களுக்கெல்லாம் செருப்பால அடிச்ச மாதிரி இருந்தது. ஏன்னா, அவர் சொன்னதுலயும், ஒரு உண்மை இருக்கு இல்லையா?
''அதே சமயம், நீங்க திருந்திட்டா, சாமியும் திரும்ப வந்துடுவாருன்னும் சொன்னவரு, கோவிலுக்கு பின்னால இருக்குற புற்று பக்கமா போய் அப்படியே மறைஞ்சிட்டாரு. அவர் தான் இந்த பாம்பு வடிவத்துல நடமாடறதா ஒரு நம்பிக்கையும் இருக்கு,'' என்றார், மாமா.
''அப்ப அந்த சிலை திரும்ப வந்துடும்ன்னு நீங்க நம்பறீங்களா?'' என்று கேட்டான், தனா.
''நான் நம்பறேன். அதேபோல அவர் இந்த ஊர்ல நடமாட துவங்கியதிலிருந்து தப்பானவங்கள்லாம் மாரடைப்பு, 'கொரோனா'ன்னு போய் சேர்ந்துட்டாங்க. கோவில வெச்சு பொழச்ச பல பேர், இப்ப இல்ல. அதனால, எனக்குள்ளயும் ஒரு நம்பிக்கை,'' என்று முடித்தார், சதாசிவம் மாமா.
தனா, சிலை பற்றியே பேசியது ஏன் என்று தெரியவில்லை, குமாருக்கு.
''நாம வந்த வேலையை பார்ப்போம்,'' என்று இடைவெட்டினான், குமார்.
''சிரித்தபடி வந்த வேலை முடிஞ்சுடிச்சு குமார்,'' என்றான், தனா.
''என்ன சொல்றீங்க?''
''எதுக்காக வந்தேனோ அது முடிஞ்சுடிச்சு. போகும்போது விவரமா சொல்றேன். இப்ப நாம கோவிலுக்கு போய், சாமி தரிசனம் பண்ணுவோமா?'' என்றான், தனஞ்ஜெயன்.
''வாங்க நானே கூட்டிக்கிட்டு போறேன்,'' என்று எழுந்தார், சதாசிவம் மாமா.
கோவில் பிரமாண்டமாக, கம்பீரமாக இருந்தது.
பழங்கால கோவில். சிமென்ட், ஜல்லி, பொக்லைனர் என்று எதுவுமே இல்லாத காலத்தில் சுண்ணாம்பு கலவையில் கட்டப்பட்ட கோவில். ஒவ்வொரு துாணிலும் சிற்பங்கள். விதானத்தில் கூட வேலைப்பாடுகள். தன் மொபைல் போனில் அவைகளை படம் பிடித்தபடி, சன்னிதி நோக்கி சென்றபோது, படபடப்போடு எதிரில் வந்தார், பட்டர்.
''என்ன சாமி, எதனால இந்த பதற்றம்?''
''சன்னிதியில பாருங்கோ, சர்ப்பம் வந்து லிங்கம் மேல படம் விரிச்சுண்டு நிக்கிறதை... சர்ப்பம் வரும்போது, சும்மா வரலை. ஒரு வில்வ இலையை வாயில் கவ்விண்டு தான் வந்தது. எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்துப் போச்சு,'' என்றார், பட்டர்.
அவர், சொன்ன நொடி திருச்சன்னிதி நோக்கி ஓடினான், தனஞ்ஜெயன். குமாரும் பின்னால் ஓடினான். உள்ளே சன்னிதியில், லிங்கம் மேல் சற்று முன் வீட்டில் பார்த்த அதே நாகம்.
தனஞ்ஜெயனும், குமாரும் அப்போது தான், சதாசிவம் மாமா சொன்னதை முழுவதுமாக நம்ப ஆரம்பித்தனர்.
தன் மொபைலில் அந்த காட்சியை பதிவும் செய்து கொண்டான், தனஞ்ஜெயன். அடுத்த நொடி அந்த சர்ப்பம், லிங்கத்தை விட்டு விலகி, அவர்கள் எதிரிலேயே தரையில் ஊர்ந்து செல்லத் துவங்கியது.
தனஞ்ஜெயன் அதை விடாது படம் பிடித்தபடியே பின்னாலேயே செல்ல, அது கோவிலின் பின்புறம் உள்ள வெட்ட வெளியில், மரம் ஒன்றின் கீழ் இருக்கும் ஆளுயர புற்றுக்குள் புகுந்து மறைந்தது.
''நீங்க வந்தது ரொம்ப நல்ல நேரம். உங்களுக்கு, சாமி இரண்டு தடவை காட்சி தந்துட்டாரு. நீங்க அதை படமாவும் எடுத்துட்டீங்க. ஊருக்கு போய், 'யு டியூப்'ல போட்டுடுங்க. இந்த கோவிலை தேடி பக்தர்கள் வரட்டும். அதனால, எங்க கிராமமும் நல்லா வளரும்,'' என்றார், சதாசிவம் மாமா.
பதிலுக்கு அவரை அர்த்தபுஷ்டியுடன் பார்த்து, ''நீங்க நினைச்சதுக்கு மேல, இந்த ஊர் பிரபலமாகப் போகுது. போகப் போக அதை பார்ப்பீங்க,'' என்றான், தனஞ்ஜெயன்.
காரில் திரும்பும்போது, ''தனா, அவங்க எதிர்ல, நான் ஒரு டிரைவராவே நடந்துக்கிட்டேன். இப்ப நண்பனா பேசறேன், நீ இந்த ஊருக்கு எதுக்கு வந்தேன்னே தெரியல. கேட்டா, வந்த வேலை முடிஞ்சிடிச்சுங்கறே,'' என்று கேட்டான், குமார்.
''ஆமாம் குமார்... எதுக்கு வந்தேனோ அது முடிஞ்சுடிச்சு.''
''என்கூட மாமா வீட்டுக்கு வந்த, கோவிலுக்கும் போனோம். வீடியோ எடுத்த, இதுக்கா வந்த?''
''ஆமா, நீ அந்த பாம்பை பற்றி என்ன நினைக்கிற?''
''எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலடா. நீ சொல்லு, சாமியாரா, பாம்பா சுத்திக்கிட்டிருக்காரு?''
''நம்ப முடியலேல்ல?''
''சத்தியமா நம்ப முடியல. பாம்பு சுதந்தரமா சுத்துது. இவங்க அதை கும்பிட்டு கும்பிட்டு, அதோட பயத்தை போக்கிட்டாங்க. இதை தாண்டி யோசிக்க எனக்கு தெரியல.''
''லிங்கம் மேல படம் விரிச்சு நின்னுச்சே?''
''சன்னிதிக்குள்ள தேங்காய், பழம்லாம் இருக்குறதால அதை திருட, எலிகள் வரும். அப்படி வர்ற எலிகளுக்காக கூட வந்துருக்கலாம்.''
''அப்ப, நீ அந்த பாம்பை சாமியாரா நினைக்கலை?''
''நீ நினைக்கறியா?''
''என்னாலயும் நினைக்க முடியல. ஆனா, உன் மாமா சொன்ன இரண்டு விஷயம் சத்யம்.''
''என்ன அது?'' கேட்டான், குமார்.
''அந்த நடராஜர் சிலையை திருடினவன் கை அழுகிப் போகும்ன்னாரு இல்லையா?''
''ஆமா, அதுக்கென்னா?''
''அழுகிடிச்சு குமார்...'' என்றான், தனா.
இதை கேட்டவுடன், காரை பிரேக்கடித்து நிறுத்தியபடி, ''என்னடா சொல்ற?'' என்று கேட்டான், குமார்.
''ஆமாம், அழுகிடுச்சு. அந்த திருடனையும், அந்த சிலை எங்க இருக்குன்னும் எனக்கு தெரியும். அது திரும்ப வந்துரும்ன்னும் சொன்னார் இல்லையா?'' என்று தனஞ்ஜெயன் கூறியதும், தலையை ஆட்டி ஆமோதித்தான், குமார்.
''அதேபோல அது திரும்பப் போகுது. அதுவும் இன்னிக்கு ராத்திரியே.''
''புரியும்படி சொல்றியா... எனக்கு தலை சுத்துது,'' என்றான், குமார்.
''விளக்கமாவெல்லாம் உன்கிட்ட என்னால பேச முடியாது. அந்த சிலையோட நாம இன்னிக்கு ராத்திரியே திரும்பி வரோம். பொழுது விடியறதுக்குள்ள அதை அந்த புற்றுக்கிட்ட வெச்சுடறோம்,'' என்றான், தனா.
''தனா, என்னடா சொல்ற?'' என்றான், குமார்.
''ஆமாம் குமார். இதுக்கு நீ எனக்கு துணையா இருந்தாபோதும்,'' என்று தனா சொல்ல, குமார் முகத்தில், ஆச்சரிய ததும்பல்.
- தொடரும்.- இந்திரா சவுந்தர்ராஜன்