/இணைப்பு மலர்/வாரமலர்/வாழ்ந்து பார்க்க வேண்டும், பிறரை வாழ வைத்து பார்க்க வேண்டும்!வாழ்ந்து பார்க்க வேண்டும், பிறரை வாழ வைத்து பார்க்க வேண்டும்!
வாழ்ந்து பார்க்க வேண்டும், பிறரை வாழ வைத்து பார்க்க வேண்டும்!

PUBLISHED ON : ஜன 07, 2024

பி.கே.எப்., ஆடிட்டிங் நிறுவனத்தின், 45ம் ஆண்டு விழா, சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவின் கதாநாயகர், டாடா குழுமங்களின் நிர்வாக அதிகாரி, சந்திரசேகரன்.
இந்த விழாவில், 'ஹைலைட்'டாக, சமூகத்திற்காக பாடுபடுபவர்களில் சிலர் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கி, கவுரவிக்கப்பட்டனர். அவர்களில் பலரையும் கவர்ந்தவர், ப்ரீத்தி சீனிவாசன்.
சக்கர நாற்காலி மற்றும் உதவியாளர் துணையோடு மேடைக்கு வந்த இவருக்கு, தற்போது வயது: 44. இவர் தன், 18வது வயதில், இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின், தலைவியாக திகழ்ந்தவர்.
தந்தையின் பணி காரணமாக, அமெரிக்காவில் வளர்ந்து, அங்கே படிப்பில் பல சாதனைகள் புரிந்தவருக்கு, கிரிக்கெட் விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டது.
கிரிக்கெட் வாழ்க்கைக்கு, அமெரிக்கா சரிப்பட்டு வராது என்பதால், இந்தியா வந்தார். மளமளவென அதன் உச்சத்தை தொட்டார்.
ஆனால், ஒரு விபத்து, அவரது வாழ்க்கையை அடியோடு மாற்றியது. கழுத்திற்கு கீழ் உறுப்புகள் செயல்படவில்லை, முதுகு தண்டுவட பிரச்னை என, அறியப்பட்டது.
துறுதுறுவென்று ஓடிக்கொண்டிருந்தவர், படுத்த படுக்கையானார். இந்நிலையில், ஆதரவாக இருந்த தந்தையும் மரணமடைய, இவரது உடலும், உள்ளமும் பெரிதும் பின்னடைவை சந்தித்தது. இரண்டு முறை மரணத்தை தொட்டு திரும்பியுள்ளார்.
ஏதோ ஒரு காரணத்தால், இறைவன் வாழ வாய்ப்பு கொடுத்திருக்கிறார் என்று உணர்ந்து, மன உறுதியுடன் போராடி ஜெயித்துள்ளார்.
தன்னைப் போல பாதிக்கப்பட்டவர்களுக்கு வழி காட்டவோ, துாக்கி விடவோ, எந்த அமைப்பும் இல்லை என, வருத்தப்பட்டவர், தாமே அப்படிப்பட்ட அமைப்பை துவங்க முடிவு செய்தார்.
அதன் செயல் வடிவம் தான், 'சோல் ப்ரீ' என்ற தொண்டு மையம். நன்கொடை மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் செயல்படும் இந்த மையம், தற்போது, நாடு முழுவதும் அறியப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் இருந்து செயல்படும் இந்த அமைப்பானது, முதுகு தண்டுவட குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மருத்துவ உபகரணம் மற்றும் ஆலோசனை வழங்குவது உள்ளிட்ட பல உதவிகள் செய்து வருகிறது. நாடு முழுவதும் பலர், பலன் அடைந்து வருகின்றனர்.
இதற்காக, தன்னம்பிக்கை பேச்சாளராக மேடைகளில் வலம் வருகிறார், ப்ரீத்தி சீனிவாசன்.
முதுகு தண்டுவட பாதிப்பு உள்ளவர்களை பராமரிப்பது, எளிய குடும்பத்தினருக்கு பெரும் சவால். எனவே, அவர்களைத் திரட்டி, 'தற்சார்பு கிராமம்' என்ற ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து, அவர்களை ஆனந்தமாக, நிம்மதியாக, ஆற்றல் உள்ளவர்களாக வாழ வைக்கும் முயற்சியில் மும்முரமாக இறங்கியுள்ளார். இவரது முயற்சியை பாராட்டியே, விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
ப்ரீத்தி சீனிவாசன், முயற்சி திருவினையாகட்டும்.
தொடர்புக்கு preethi@soulfree.org
எல். முருகராஜ்