PUBLISHED ON : டிச 31, 2023

இங்கிலாந்து நாட்டில், ஜனவரி முதல் நாள் பொழுது விடிந்ததும், கையில் ரொட்டித் துண்டும், நிலக்கரி துண்டும் வைத்துக் கொண்டு, நண்பர்கள் வீட்டுக்குச் செல்வது வழக்கம். இப்படி சென்றால் இருவருடைய வீடுகளிலும், ஆண்டு முழுவதும் உணவுக்கு பஞ்சமே இருக்காது என, நம்புகின்றனர்.
* ஜப்பானில், புத்தாண்டு அன்று, வீடுகளின் முன், வைக்கோலால் செய்த கயிறுகளைத் தொங்க விடுகின்றனர். இப்படி செய்தால், கெட்டது விலகி, நல்லது நடக்கும் என்று நம்புகின்றனர்.
* ஆஸ்திரேலியாவில், புத்தாண்டை வரவேற்கும் விதமாக, டிசம்பர் 31, இரவு, 12:00 மணிக்கு விசில் சத்தம் எழுப்புவர். கூடவே, கிலுகிலுப்பை சத்தமும் ஒலிக்க செய்வர். அந்நேரத்தில், குதிரை போன்ற விலங்குகளின் மீது சவாரி செய்வது, அதிர்ஷ்டமாகக் கருதப்படுகிறது.
* லாவோஸ் மக்கள், புத்தாண்டு அன்று, கூண்டில் அடைத்து விற்கப்படும் பறவைகளை வாங்கி, பறக்க விட்டும், உயிருடன் விற்கப்படும் மீன்களை வாங்கி, ஆறுகளில் விட்டும் கொண்டாடுவர்.
* வட ஆப்ரிக்காவில், புத்தாண்டு அன்று, தீ மூட்டி அதை வணங்கிய பின், அதைத் தாண்டி செல்வர். அப்படி தாண்டும் போது, அவர்களது தவறுகள், பாவங்கள் தீக்கிரையாகி விடுவதாக நம்புகின்றனர்.
* ஜெர்மனியில், புத்தாண்டு அன்று, ஒரு சிறு பனிக்கட்டியை கீழே போட்டு உருக விடுவர். அது உருகி இதய வடிவில் அல்லது மோதிர வடிவில் வந்தால், அந்த ஆண்டு திருமணம் நடக்கும் என்று அர்த்தம். கப்பல் வடிவில் வந்தால், பயணம்; பன்றியின் வடிவில் வந்தால், அந்த ஆண்டில், உணவுப் பொருட்களுக்கு பஞ்சம் வராது என்பது நம்பிக்கை.
* ஆஸ்திரியா நாட்டில், புது ஆண்டு கொண்டாட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பது, விருந்து தான். இளம் பன்றியை, 'ரோஸ்ட்' செய்து, அதன் மேல் மாவு, பனை வெல்லம், குக்கீஸ் மற்றும் சாக்லேட் ஆகியவற்றை அலங்கரித்து சாப்பிடுவர்.
* ரோமானியர்கள், புது ஆண்டு பிறந்தவுடன், கறுமையான, உயரமான மனிதரைப் பார்த்தால், அந்த ஆண்டு, தங்களுக்கு அதிர்ஷ்டமானது என, நம்புகின்றனர்.
* ஹங்கேரி நாட்டில், புத்தாண்டு அன்று, ஊர் மக்கள் எல்லாரும் சேர்ந்து கொடும்பாவியை எரிக்கின்றனர். இப்படிச் செய்வதன் மூலம், சென்ற ஆண்டில் ஊருக்குள் வந்த கெட்ட சக்தியை அழிப்பதாக நம்புகின்றனர்.
* கொரியாவில், ஜனவரி 1ம் தேதியன்று, குடும்பத்துடன் பட்டம் விட்டு மகிழ்வர். இப்படி செய்வதன் மூலம் ஆண்டு முழுக்க, தங்களின் பேரும், புகழும் சிறகடித்து பறக்கும் என்று, நம்புகின்றனர்.
* ஸ்பெயின் நாட்டில், டிசம்பர் 31, நள்ளிரவு, 12:00 மணிக்கு, 12 முறை கடிகார மணி அடித்து முடிவதற்குள், 12 திராட்சைகளைச் சாப்பிட்டு முடித்து விட்டால், வரப்போகும், 12 மாதமும் இனிமையாக இருக்கும் என்று நம்புகின்றனர்.
* சுவிஸ் நாட்டில், புத்தாண்டு அன்று, தரையில் ஒரு துளி பாலை தவற விட்டால், அதிர்ஷ்டம் என்று நம்புகின்றனர்.