Dinamalar Logo

சனி, மே 16, 2026 ,வைகாசி 2, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/மருத்துவ டிப்ஸ்!

மருத்துவ டிப்ஸ்!

மருத்துவ டிப்ஸ்!


PUBLISHED ON : ஜூன் 01, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 01, 2025


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நொச்சி இலை, வேம்பு, முடக்கத்தான் மற்றும் வாதநாராயணன் இலை ஆகியவற்றை ஒவ்வொன்றிலும் ஒரு கைப்பிடி எடுத்து, ஒரு குடம் அளவு தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். கரும்பச்சை நிறத்தில் இருக்கும் இந்த தண்ணீரை, இளம் சூட்டில் காலில் மேலிருந்து கீழாக மெதுவாக ஊற்ற, மூட்டுவலி, கால் வலி குணமாகும்.

* நகம் கருமையுடன் சொத்தையாகி இருந்தால், துத்தி இலையை சாம்பிராணியுடன் சேர்த்து அரைத்து பற்றுப் போட்டு வந்தால், விரைவில், நகத்தின் கருமை மறையும்.

* அருகம்புல்லை சின்ன சின்னதாய் வெட்டி, நல்லெண்ணெயில் போட்டு, வெயிலில் ஒரு வாரம் வைத்து, பின், அந்த எண்ணெயை, இரண்டு மாதம் தலையில் தடவி குளித்து வந்தால், இளநரை போய்விடும்.

* உருளைக்கிழங்கு சாறு, தக்காளி சாறு மற்றும் பப்பாளி சாறு மூன்றையும் கலந்து, முகத்தில் பூசி முகம் கழுவ, கரும் புள்ளிகள் மறையும்.   

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us