உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த ரோஜா!
உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த ரோஜா!
உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த ரோஜா!
PUBLISHED ON : மார் 23, 2025

உலகில் பல்வேறு வகை ரோஜாக்கள் விற்பனையாகி வருகின்றன. இருப்பினும், அவற்றுள் ஒரு வகை ரோஜாவின் விலை, 130 கோடி ரூபாய் என்றால், நம்ப முடிகிறதா?
நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும், அது தான் உண்மை. உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த, அந்த ரோஜாவின் பெயர், ஜூலியட் ரோஸ்.
களிமண், செம்மண் மற்றும் மணல் என, ஜூலியட் ரோஜா செடி, அனைத்து மண்ணிலும் வளரும். இருந்தாலும், வழக்கமான ரோஜாக்களைப் போல், இதை வளர்ப்பது, அவ்வளவு எளிதல்ல. இதற்கென்று சிறப்பு கவனிப்பு தேவைப்படும்.
இந்த அரிய வகை ரோஜாவை, புகழ்பெற்ற பூக்கள் நிபுணரான, டேவிட் ஆஸ்டின் என்பவர் உருவாக்கினார். இதை உருவாக்க, அவருக்கு, 15 ஆண்டுகள் ஆனது.
பல்வேறு வகை ரோஜாக்களை, கலப்பினச் சேர்க்கை செய்து பரிசோதித்து, இறுதியாக இதை, 1978ல் தான், உருவாக்க முடிந்தது.
ஷேக்ஸ்பியரின் பிரபல கதாபாத்திரங்களான, 'ரோமியோ - ஜூலியட்' என்பதில், பெண் கதாபாத்திரம், ஜூலியட்டின் நினைவாகவே, இந்த ரோஜாவுக்கு, ஜூலியட் என்ற பெயரைச் சூட்டினார், டேவிட் ஆஸ்டின்.
இந்த ரோஜா, 2006ல், இந்திய மதிப்பில், 90 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. இது, வரலாற்றில் அதுவரை இல்லாத அளவுக்கு, அதிகபட்ச விற்பனைத் தொகை. தற்போது இதன் விலை, இந்திய மதிப்பில், சுமார், 130 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மிகவும் விலையுயர்ந்த ரோஜா மட்டுமல்ல. உலகிலேயே மிக அழகானது, ஜூலியட் ரோஸ்.
இது, மற்ற ரோஜாக்களில் இல்லாத, தனித்துவமான நறுமணத்தைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, வாடாமல் அல்லது உலராமல், குறைந்தது மூன்று ஆண்டுகள் வரை, புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
மோசமான மனநிலையில் இருப்பவர், ஜூலியட் ரோஜாவின் வாசனையை முகர்ந்தால், உற்சாகமான மனநிலையைப் பெறுவதோடு, மனஅழுத்தமும் வெகுவாகக் குறைவதை உணர முடியும் என்பது, இதன் மற்றொரு சிறப்பு.
எம். பாரதி