கவிதைச்சோலை - எங்கெங்கும் பூக்கள்!
கவிதைச்சோலை - எங்கெங்கும் பூக்கள்!
கவிதைச்சோலை - எங்கெங்கும் பூக்கள்!
PUBLISHED ON : ஜூலை 07, 2024

வெயிலுக்கொரு பூ
மழைக்கொரு பூ
பனிக்கொரு பூ
பன்னிரண்டாண்டுகள்
தவமிருந்து பூக்கும் ஒரு பூ!
காலையில் ஒரு பூ
மாலையில் ஒரு பூ
இரவினில் மலர்ந்து
விழித்திருக்கும் ஒரு பூ!
வாசனைக்கு ஒரு பூ
வண்ணங்களுக்காக ஒரு பூ
வாழத் தொடங்கும் மனங்களுக்கு
வாழ்த்துச் சொல்லும் ஒரு பூ!
சாமிக்கொரு பூ
சவத்துக்கொரு பூ
சாமிகளுக்கு நடுவில்
பொய் சாட்சியானதால்
சபிக்கப்பட்டது ஒரு பூ!
நீர்ப் பூ நிலப்பூ
கொடிப் பூ மரப்பூ...
ஆயிரமாயிரம் பூக்கள்
விதவிதமாய் பூத்திருந்தாலும்
வீதியின் ஓரத்தில்
முழம் போட்டு விற்பவளின்
வயிற்றைக் கழுவும்
அந்தப் பூதான்
சிறப்பினும் சிறப்பு!
-இ.எஸ்.லலிதாமதி, சென்னை.
மழைக்கொரு பூ
பனிக்கொரு பூ
பன்னிரண்டாண்டுகள்
தவமிருந்து பூக்கும் ஒரு பூ!
காலையில் ஒரு பூ
மாலையில் ஒரு பூ
இரவினில் மலர்ந்து
விழித்திருக்கும் ஒரு பூ!
வாசனைக்கு ஒரு பூ
வண்ணங்களுக்காக ஒரு பூ
வாழத் தொடங்கும் மனங்களுக்கு
வாழ்த்துச் சொல்லும் ஒரு பூ!
சாமிக்கொரு பூ
சவத்துக்கொரு பூ
சாமிகளுக்கு நடுவில்
பொய் சாட்சியானதால்
சபிக்கப்பட்டது ஒரு பூ!
நீர்ப் பூ நிலப்பூ
கொடிப் பூ மரப்பூ...
ஆயிரமாயிரம் பூக்கள்
விதவிதமாய் பூத்திருந்தாலும்
வீதியின் ஓரத்தில்
முழம் போட்டு விற்பவளின்
வயிற்றைக் கழுவும்
அந்தப் பூதான்
சிறப்பினும் சிறப்பு!
-இ.எஸ்.லலிதாமதி, சென்னை.