PUBLISHED ON : ஜன 26, 2025

பி.ஜி.பி.இசக்கி, சென்னை: லண்டன் தேம்ஸ் நதியில், கால் நனைத்த அனுபவம் பற்றி...
நானும், லென்ஸ் மாமாவும் ஷூ, சாக்ஸை கழற்றி விட்டு, நனைத்திருக்கிறோம்! பயங்கர குளிர்... தண்ணீர், 'ஜில்'லென்று இருந்தது!
டி.பசுபதி, ஊஞ்சவேலாம்பட்டி, கோவை: 'தினமலர் - வாரமலர்' இதழுக்கு, வாசகர்கள் படைப்புகள் அனுப்பினால், குறைந்தபட்சம் எவ்வளவு நாட்களுக்குள் வெளியாக வாய்ப்புள்ளது?
இதழில் பக்கங்களுக்கான இடத்தையும், படைப்புகளையும் பொறுத்து முடிவு செய்யப்படும்!
க.மோகனசுந்தரம், நெல்லை: தாங்கள், தங்கள் சட்டை மேல் பட்டனை போடுவதில்லையே... ஸ்டைலா?
காற்று வருவதற்காக ஏற்பட்ட பழக்கம்!
ஆ.செ.நிதிஷ், கோவை: 'அடுத்த பொங்கலுக்கு தான் பணம்...' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளாரே...
அடுத்த ஆண்டு, சட்டசபை தேர்தல் வந்து விடும்; அப்போது பணம் கொடுத்தால் ஓட்டு கிடைக்கும்!
அமைச்சர் துரைமுருகனும் அதை, 'ஓப்பனாய்' போட்டுடைத்து விட்டாரே!
டி.ஜெயசிங், கோவை: சீறிப் பாயும் காளைகளை, பெண்களும் வளர்க்க ஆரம்பித்து விட்டனரே...
நல்ல முன்னேற்றம்; காளைகளை அடக்க களம் பாய்ந்தால் இன்னும் சிறப்பு!
என்.ஆசைத்தம்பி, சென்னை: ஈரோடு சட்டசபை இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் போட்டியிடாத நிலையில், முதல்வர் ஸ்டாலின் என்ன நினைப்பார்?
போட்டியாளரே இல்லாத களத்தில், வெற்றி பெறுவது சகஜம் தானே!
* மு.நாகூர், சுந்தரமுடையான், ராமநாதபுரம்: டில்லி சட்டசபை தேர்தலில், 'இண்டியா' கூட்டணி கட்சிகளால், காங்கிரஸ் தனித்து விடப்பட்டுள்ளது பற்றி...
அக்கட்சியில், சரியான தலைமை இல்லை என்றாலும், மூத்த தலைவர்கள், இன்னும், 'பெரியண்ணன்' மனப்பான்மையை கைவிடவில்லை; அதனால் இந்த நிலை!
* எம்.ராஜேந்திரன், லால்குடி, திருச்சி: 'எங்களைத் தவிர, வேறு கட்சியினரோ, பத்திரிகைகளோ, ஆளுங்கட்சிக்கு எதிராக விமர்சனம் செய்வதில்லை...' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, வருத்தப்பட்டுக் கொள்கிறாரே...
'தினமலர்' அப்படி அல்ல என்பது, உங்களுக்குத் தெரியும் தானே!