PUBLISHED ON : ஜூலை 14, 2024

ம.காவியா, கோவை: தங்கள் அலுவலக ஊழியர்கள், தங்களுக்கு தமிழில் வணக்கம் செலுத்துகின்றனரா அல்லது ஆங்கிலத்தில் வணக்கம் செலுத்துகின்றனரா?
தமிழில் தான்! நான் அவர்களுக்கு, 'இனிய மகிழ்ச்சியான காலை வணக்கம்!' எனச் சொல்வேன்; அவர்களும் அப்படியே பதில் அளிப்பர்!
மு.மதிவாணன், அரூர், தர்மபுரி: 'கட்சி துவங்கி, 35 ஆண்டுகள் ஆகியும், ஆட்சிக்கு வர முடியாததை நினைக்கும்போது, மனம் வலிக்கிறது...' என்கிறாரே, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்?
அவர் மனம் வலித்துக் கொண்டே தான் இருக்கப் போகிறது!
* சி.கார்த்திகேயன், சாத்துார்: எதிர் காலத்தில், நடிகர் விஜய், மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு இருக்கிறதா?
அவர், சினிமாவில் நடித்துக் கொண்டே தான் இருக்கப் போகிறார்!
வி.திருமுகில், கள்ளக்குறிச்சி: நீங்கள் யாரென்று தெரியாமலேயே, உங்களைப் பற்றி, உங்களிடமே யாராவது பேசியதுண்டா?
உண்டு. ஆபீஸ், 'லேண்ட் லைனில்' வரும், 'போன் கால்'களில் சில நேரம் பேசுவேன்.
அப்போது, 'அந்துமணி இருக்கிறாரா?' என்று கேட்பர்; நான், 'அந்துமணியின் பி.ஏ., முனியாண்டி பேசுகிறேன்...' என்பேன்; போனை வைத்து விடுவர்!
செல்லையா, நெல்லை: எப்போதுமே தொள தொளப்பான சட்டை தானா?
ஆமாம்; அது தான் வசதி!
பெர்லின் பிரபு, மருதுார்குறிச்சி, குமரி: என் கேள்வி, பரிசு பெற தகுதி இல்லாததாகவே இருக்கட்டும். நீங்கள், அதை வாசிப்பீர்களா?
சராசரியாக ஒவ்வொரு நாளும், 200 கேள்விகள் வருகின்றன; ஒன்று விடாமல் படித்து விடுவேன். உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்து விட்டதா, பிரபு?
ஆ.வீரப்பன், சென்னை: எம்.ஜி.ஆர்., மீது மிகுந்த அபிமானம் கொண்ட நீங்கள், அவரை நேரில் சந்தித்திருக்கிறீர்களா?
'தினமலர்' நாளிதழ் ஈரோடு பதிப்பு அச்சு இயந்திரத்தை, முதன் முறையாக, அவர் விரலைப் பிடித்து இயக்க வைத்தேன்!
* என்.கதிர்வேல், சென்னை: ஒரு மனிதனுக்கு, மகிழ்ச்சியும், அமைதியும் எப்படி கிடைக்கும்?
தியாகம் செய்யவும், மன்னிக்கவும், நன்றி கூறவும், ஒரு மனிதன் தெரிந்து கொண்டு விட்டால், அவர், மகிழ்ச்சியையோ, அமைதியையோ தேடி ஓட வேண்டியதில்லை. அவை தாமாகவே, அவரைத் தேடி வரும்!