PUBLISHED ON : ஜூன் 01, 2025

பா - கே
அலுவலகம்.
மதிய உணவு இடைவேளைக்கு பின், உதவி ஆசிரியைகள் சிலர், மொபைல் போனில் பாட்டு கேட்டபடியும், நாளிதழ், வார, மாத இதழ்களை படித்தபடியும், 'ரிலாக்ஸ்' செய்து கொண்டிருந்தனர்.
ஒரு உதவி ஆசிரியை, தன் கணவருக்கு போன் செய்து, 'சாப்பிட்டீர்களா? சாப்பாடு நன்றாக இருந்ததா?' என, விசாரித்துக் கொண்டிருந்தார்.
அருகிலிருந்த லென்ஸ் மாமா, 'நீங்கள் தினமும் இதுபோல் போன் செய்து, 'லஞ்ச்' சாப்பிட்டாரா, நன்றாக இருந்ததா என, கேட்கிறீர்கள். அவரும் ஒரே மாதிரியான பதில் சொல்கிறார் போலிருக்கு. அது உண்மையான பதிலா இருக்கும் என்று நினைக்கிறீர்களா? நீங்க கட்டிக் கொடுத்தனுப்பிய சாப்பாட்டை விடுத்து, வெளியே வாங்கி சாப்பிடுகிறாரோ, என்னமோ...' என, கிண்டல் அடித்தார்.
'உங்களுக்கு எப்பவும் குதர்க்க புத்தி தான். நீங்க தான், மாமியை ஏமாற்றிவிட்டு, ஹோட்டலுக்கு சென்று விடுகிறீர். என் வீட்டுக்காரர் அப்படியெல்லாம் செய்ய மாட்டார்...' என்றார், உ.ஆ.,
'ஐயோடா... நம்பிட்டேன்...' என்றார், நக்கலாக.
இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த, மூத்த உதவி ஆசிரியை, '10 வகையான கணவர்கள் இருப்பதாக, ஒரு கட்டுரையில் படித்துள்ளேன். அந்த, 10 வகையினரும் எத்தகைய குணநலன்கள் பெற்றிருக்கின்றனர் என்பதையும் விளக்கமாக கூறியுள்ளனர்...' என்றார்.
'இது என்ன புது தகவலாக இருக்கிறதே... அதுபற்றி சொல்லுங்களேன்...' என்றேன், நான்.
கூற ஆரம்பித்தார்:
கணவன்மார்களை, 10 வகையாக பிரித்துள்ளனர்.
1.பேச்சிலர் கணவர்: மனைவியை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக காரியங்களை செய்பவர். மனைவியை விட, தன் நண்பர்களுடன் அதிகம் பழகுபவர். திருமண வாழ்க்கைக்கு முக்கியத்துவம் தராதவர்.
2.அமிலக் கணவர்: எந்நேரமும் அமிலம் போல் கொதித்துக் கொண்டே இருப்பவர். கோபமாக இருப்பார். வன்முறை மனநிலை, ஆதிக்க மனப்பான்மை உள்ளவர். ஆபத்தானவர்.
3.அடிமை கணவர்: ராஜாவைப் போல தான் நடத்தப்பட வேண்டும் என நினைப்பவர், ஆனால், மனைவியை அடிமையாக நடத்துகிறவர். பழைய பஞ்சாங்கத்தில் ஊறி போனவர்.
4.சராசரி கணவர்: பெரும்பாலான பெண்ணுக்கு அமையும் கணவர், இவர். மனைவியை விட, தன் பெண் தோழியரை அதிகம் நேசிப்பவர். பெண் தோழியருக்கு செலவு செய்வது பிடிக்கும்.
5.உலர் கணவர்: எதிலும் ஆர்வம் இல்லாத மனநிலை மற்றும் கஞ்சத்தனம் மிக்கவர். மனைவியின் உணர்ச்சிகளை கருத்தில் கொள்ளாதவர். உறவை சுவாரஸ்யம் ஆக்குவதில்லை. ஊடலும் இல்லை; நகைச்சுவை உணர்வும் சுத்தமாக இல்லாதவர்.
6.சந்தர்ப்ப கணவர்: மனைவியை, பிரச்னை தீர்ப்பவராக பயன்படுத்துபவர். ஏதாவது தேவைப்படும் போது மட்டுமே மனைவியை நேசிப்பார். புத்திசாலி மனைவியின் பலவீனங்களை அறிந்தவர். வேண்டியதை பெற மனைவியின் பலவீனங்களை பயன்படுத்துவார்.
7.ஒட்டுண்ணி கணவன்: சோம்பேறி மற்றும் பணத்திற்காக மனைவியை மட்டுமே நேசிப்பவர். மனைவியின் பணத்தை காதலிகளுக்காக பயன்படுத்துபவர். எந்த ஆக்கப்பூர்வமான முன்முயற்சியும் இல்லாதவர். வீட்டுப் பொறுப்புகளில் கூட மனைவிக்கு உதவ மாட்டார்.
8.குழந்தை கணவர்: பொறுப்பற்ற மற்றும் குழந்தைத்தனமானவர். அவரது தாய், உடன் பிறந்தவர்கள் அல்லது உறவினர்களை கேட்காமல், சொந்தமாக முடிவுகளை எடுக்க தெரியாது; மனைவியை உறவினர்களுடன் ஒப்பிட்டு பேசுபவர். பிரச்னை வந்தால், உறவினர்களிடமோ, தாயிடமோ, உடன் பிறந்தவர்களிடமோ அடைக்கலமாகி விடுவார்.
9.வருகை பதிவேடு கணவர்: பெரும்பாலும் வீட்டில் இருப்பதில்லை. பார்வையாளர் போல வருவார், போவார். குடும்பத்திற்கு அனைத்து பொருட்களையும் வாங்கி விடுவார். ஆனால், குடும்பத்திற்காக நேரம் ஒதுக்காதவர்.
10.அக்கறையுள்ள கணவர்: அக்கறையும், அன்பும் கொண்டவர். உங்கள் உணர்ச்சிகளை சரியாக கையாள்பவர். குடும்பத்திற்காக நேரம் ஒதுக்குபவர். குடும்ப உறுப்பினர்களுக்கு சரியான வழிகாட்டியாக இருப்பவர். மிகவும் பொறுப்பான மற்றும் மனைவியை துணையாகவும், உதவியாளராகவும் கருதுபவர்.
'இதிலிருந்து, ஒவ்வொரு மனைவியும், தத்தம் கணவன், எந்த ரகமானவர் என, அவர்களது நடவடிக்கைகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்...' எனக் கூறி முடித்தார், மூத்த உ.ஆ.,
இதைக் கேட்டதும், 'நான் இதில் எதிலும் சேர்த்தி இல்லை. நான் தனி...' என்றார், கெத்தாக, லென்ஸ் மாமா.
'அது எங்களுக்கும் தெரியுமே...' எனக் கூறி, பூடகமாக சிரித்தார், உ.ஆசிரியை.
ப
துாக்கம் சரியாக இல்லை என்றால், நாம் என்ன மாதிரியான பிரச்னைகளை எல்லாம் சந்திக்க வேண்டியது இருக்கும். மேலும், உடல் மற்றும் மனதில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதையும் பார்க்கலாம். துாக்கம் சரியாக வராமல் இருக்கும் போது, அது நோயாக கருதப்படுகிறது. துாக்கம் இல்லை என்றால், என்னென்ன பிரச்னைகள் வரும் தெரியுமா?
* நல்லபடியாக சிந்திக்க முடியாது
* பிரச்னைகளுக்கு தீர்வு அல்லது முடிவு எடுக்க முடியாது
* இதயம் படப்படப்பாக இருக்கும்
* தேவையற்ற கோபம் வரும்
* உடல் எடை அதிகமாகும்
* சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படும்
* இதயம் சார்ந்த நோய்கள் வரும்
* முகத்தில், தோலில் சுருக்கம் ஏற்படும்
* முகத்தில் புத்துணர்ச்சி, பொலிவு, தெளிவு இருக்காது
* முகத்தில் களைப்பு, சோர்வு, சோகம் காணப்படும்
* கண்களை சுற்றி, கருவளையம் ஏற்படும்
* ஞாபக மறதி பிரச்னைகள் அதிகமாக ஏற்படும்
* முகம் பார்க்க சிடுமூஞ்சியாக இருக்கும். கோபமாக பேசுவர்
* காதுகளில் பிரச்னை ஏற்படும். சீழ் வடியும், கேட்கும் திறன் குறையும்
* நரம்பு சார்ந்த நோய் தாக்கும், நரம்பு தளர்ச்சி ஏற்படும். குறிப்பாக, ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படும்
* பெண்களுக்கு சிறிய வயதில் துாக்கம் இல்லையென்றால், மாதவிடாய் பிரச்னை ஏற்படும். அதனால், குழந்தை பிறப்பதில் தாமதம் அல்லது பிரச்னை ஏற்படும்
* மன நோய்கள் வந்து, மனதை பாதிக்கும்; வாழ்க்கையே பாதிக்கும்.
* தசைகள், எலும்புகள் வளர்ச்சி இருக்காது. உடல் வளர்ச்சி இருக்காது. புதிய உயிர் அணுக்கள், செல்கள் உருவாவதில் சிக்கல் ஏற்படும்
* துாக்கம் சரியாக இல்லையென்றால், வயதான தோற்றம் ஏற்படும்.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது!