PUBLISHED ON : பிப் 16, 2025

உலக மக்கள் அனைவரும், மகிழ்ச்சியான, அமைதியான வாழ்க்கையையே விரும்புகின்றனர். சில நாடுகளில் வாழும் மக்கள், மிக அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்தும் வருகின்றனர். ஆனால், சில நாட்டு மக்கள், அதற்கு எதிர்மாறாக, போர் பயத்திலும், பொருளாதார நெருக்கடியிலும் வாழ்ந்து வருகின்றனர்.
உலகில், பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற நாடுகள் பற்றிய தகவல், தற்போது வெளியாகியுள்ளது.
அரசியல் அமைதியின்மை, அதிக குற்ற விகிதங்கள், இயற்கைப் பேரழிவுகள், தனிப்பட்ட பாதுகாப்பு, சுகாதாரப் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு ஆகியவற்றை வைத்து கணிக்கப்பட்ட, உலகின் ஆபத்தான நகரங்கள் என்னென்ன என்று பார்ப்போம்...
• உலகின் ஆபத்தான நகரங்களின் பட்டியலில், முதல் இடத்தில் இருப்பது, தென் அமெரிக்கா நாட்டில், வெனிசுலாவின் தலைநகர், கராகஸ்.
இங்கு, வன்முறை. கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன. அதோடு, அரசியல் குளறுபடிகள் அதிகம் நடைபெறும் நகரமாகவும், கராகஸ் உள்ளது.
* அண்டை நாடான பாகிஸ்தானின் கராச்சி நகரம், சுற்றுலாப் பயணியருக்கு அதிக ஆபத்துள்ள நகரங்களில், இரண்டாவது இடத்தில் உள்ளது.
இங்கு, குற்றம், வன்முறை மட்டுமின்றி, பயங்கரவாத அச்சுறுத்தல்களும் அதிகமாக உள்ளன. இயற்கைப் பேரிடர்களும் அதிகம் ஏற்படும் நகரமாக, கராச்சி உள்ளது.
* தென் கிழக்கு ஆசிய நாடான மியான்மரின் யாங்கோன். மூன்றாவது ஆபத்தான நகரமாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நகரத்திலும், குற்றச் செயல்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. மேலும், பொருளாதாரப் பிரச்னைகளும்
அதிகரித்துள்ளன.
* மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கு, அங்கு நிலவி வரும் வறுமையே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதனால், இது உலகின் நான்காவது மிக ஆபத்தான நகரமாக உருவெடுத்துள்ளது.
* தென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் தலைநகர், மணிலாவில், இயற்கைப் பேரிடர் அபாயம் அதிகமாக உள்ளது. மேலும், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் குறைவாக இருப்பதால். ஆபத்தான நகரமாகக் கருதப்படுகிறது. அதனால் தான் இது. உலகின் ஐந்தாவது மிகவும் ஆபத்தான நகரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
• பட்டியலில் ஆறாவது இடத்தை, நம் அண்டை நாடான வங்கதேசத்தின் தலைநகரான, டாக்கா பெற்றுள்ளது. இங்கு, குற்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இங்கே, வாழ்க்கைத் தரமும் மிகவும் மோசமாக உள்ளது.
* பட்டியலில் ஏழாவது இடத்தில், தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் தலைநகர் பொகோட்டா நகரம் உள்ளது. கொலம்பியாவின் மையப்பகுதியில், இந்த நகரம் அமைந்துள்ளது. இது, வண்ணமயமான நகரமாக இருந்தாலும், இங்கு நிலவும் பாதுகாப்பற்ற தன்மை மற்றும் குற்ற சம்பவங்கள் காரணமாக, ஆபத்தான நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
* இவற்றைத் தொடர்ந்து, உலகின் மிகவும் ஆபத்தான நகரங்களின் பட்டியலில், ஆப்ரிக்க நாடான எகிப்து தலைநகர் கெய்ரோ, எட்டாவது இடத்தையும், வட அமெரிக்க நாடான மெக்சிகோ ஒன்பதாவது இடத்தையும், தென் அமெரிக்க நாடான ஈக்வடார் தலைநகர் குய்டோ நகரம், 10வது இடத்தையும் பெற்றுள்ளன.
- மு. நாவம்மா