Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/உலக சுற்றுலாவில், நான்காமிடம் பிடித்த இந்திய மாநிலம்!

உலக சுற்றுலாவில், நான்காமிடம் பிடித்த இந்திய மாநிலம்!

உலக சுற்றுலாவில், நான்காமிடம் பிடித்த இந்திய மாநிலம்!

உலக சுற்றுலாவில், நான்காமிடம் பிடித்த இந்திய மாநிலம்!

PUBLISHED ON : மே 25, 2025


Google News
Latest Tamil News
வங்கதேசம் மற்றும் மியான்மர் எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ள, மலைப் பிரதேசமான அசாம் மாநிலம், வடகிழக்கு இந்தியாவின் நுழைவு வாயிலாக விளங்குகிறது.

இம்மாநிலம், இயற்கை எழில் கொஞ்சும் அழகு, உயர்வான கலாசாரம், பசுமையான தேயிலை தோட்டங்கள் என, பல்வேறு சிறப்பு அம்சங்களுடன், இந்தியாவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடங்களில் ஒன்றாக திகழ்கிறது.

இந்நிலையில், இந்த ஆண்டில், உலக அளவில் சுற்றிப் பார்க்க வேண்டிய முதல், 52 இடங்களின் பட்டியலில், நான்காம் இடத்தைப் பிடித்து, இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது, அசாம் மாநிலம்.

அசாம் மாநிலம் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

'நியூயார்க் டைம்ஸ்' வெளியிட்டுள்ள இந்த பட்டியலில், பிரிட்டன் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள, ஜேன் ஆஸ்டென்ஸ், முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஈக்குவடாரில் உள்ள கலபகோஸ் தீவுகள், இரண்டாம் இடத்தையும், நியூயார்க் சிட்டி அருங்காட்சியகம், மூன்றாம் இடத்தையும், தாய்லாந்தின் ஒயிட் லோட்டஸ், ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளன.

கலாசார தனித்துவம் மற்றும் இயற்கை அழகுக்கு புகழ்பெற்று விளங்கும் அசாமில் தான், உலகப் புகழ்பெற்ற தேயிலைத் தோட்டங்கள் மற்றும் காசிரங்கா தேசியப் பூங்கா ஆகியவையும் அமைந்துள்ளன. இந்த பூங்கா, காண்டாமிருகங்களின் சரணாலயமாக விளங்குகிறது.

— -ஜோல்னாபையன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us