Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

PUBLISHED ON : மே 31, 2025


Google News
Latest Tamil News
என் வயது 61; தனியார் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியையாக பணிபுரிகிறேன். திருமணத்திற்கு பின், என் கணவர் தினமலர் நாளிதழை விரும்பி வாசிப்பதை கண்டேன். எனக்கும் வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது. என் பணிக்கு சிறுவர்மலர் இதழ் பெரிதும் பயன்படுகிறது.

பள்ளியில் நீதி போதனைக்கு தனி வகுப்பு கிடையாது. இந்த குறையை போக்குகிறது சிறுவர்மலர் இதழ். இதில் வரும் நீதிக்கதைகளை, பாடவேளையின் நடுவே எடுத்துச் சொல்கிறேன்.

இது, மாணவர்களுக்கு சுவாரசியம் ஏற்படுத்தி பாடங்களை கவனிக்கும் ஈர்ப்பை தருகிறது. வியப்பு மேலிட, 'இவ்வளவு விஷயம் உங்களுக்கு எப்படி மிஸ் தெரியும்!' என்று மாணவ, மாணவியர் ஆச்சரியமாக கேட்பர். அப்போது, 'சிறுவர்மலர் இதழை படித்துப் பாருங்கள்...' என்று ஆர்வத்தை துாண்டுவேன்.

சிறுவர்மலர் இதழ் செய்திகளை வகுப்பில் எடுத்து சொல்லும் போது, மாணவ, மாணவியர் பொது அறிவு வேட்கை அதிகரிக்கிறது. அறிவு வளர்ச்சிக்கும், என் தொழிலுக்கும் பக்க பலமாக திகழும் சிறுவர்மலர் இதழில், 'ஸ்கூல் கேம்பஸ்' கடிதங்களை வாசிக்கும் போது, பால்ய காலத்தில் மூழ்குவது சுக அனுபவம் தருகிறது. தேங்க்யூ சிறுவர்மலர்.

- மல்லிகா அன்பழகன், சென்னை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us