PUBLISHED ON : பிப் 15, 2025

என் வயது, 25; தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகிறேன். தினமலர் நாளிதழை பல ஆண்டுகளாக வாங்கி வருகிறோம். பெரும்பாலும் செய்தித்தாளை மட்டும் படித்து சிறுவர்மலர் இதழை கண்டுக்கொள்ளாமல் இருந்து வந்தேன்.
ஒரு நாள், அதை புரட்டிய போது கண்ணில் அதிமேதாவி அங்குராசு பகுதி விழுந்தது. மிகவும் கவர்ந்ததால் அதை படித்து பார்த்தேன். சிறுவர் இதழில் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை எதிர்பார்த்திருக்கவில்லை. அறிவுரை சொல்லும், 'இளஸ்... மனஸ்' தொடரையும் படித்து பார்த்தேன். வெகுவாக கவர்ந்தன.
உடனே, மற்ற பகுதிகளை ஒன்று விடாமல் படித்தேன். பள்ளி நினைவுகளை மீட்டும் 'ஸ்கூல் கேம்பஸ்' கடிதங்கள் மிகவும் கவர்ந்தன. உங்கள் பக்கம், மம்மீஸ் ெஹல்த் கிச்சன் என, புதிய செய்திகளுடன், பரிசுக்கான புதிர் போட்டியும் கண்டு வியந்தேன். இவ்வளவு நாட்களாக சரியாக கவனிக்காத என்னை நொந்து கொண்டேன். பழைய இதழ்களை தேடி எடுத்து படித்தேன்.
முடிந்தவரை ஒவ்வொரு சனிக்கிழமையும் அன்றே சிறுவர்மலர் இதழை படித்து விடுகிறேன். வெளியூரில் பயணம் மேற்கொண்டு இருந்தால், இதழ் பக்கங்களை அலைபேசியில் படம் எடுத்து வாட்ஸ் ஆப்பில் அனுப்ப சொல்லி பயண நேரத்திலே படித்து விடுகிறேன். அறிவுமணம் பரப்பும் சிறுவர்மலர் இதழ் மேலும் சிறப்படைய வாழ்த்துகிறேன்.
- எஸ்.ஸ்ரீகுமார், திருவள்ளூர்.