Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தீவுகள் பலவிதம்!

தீவுகள் பலவிதம்!

தீவுகள் பலவிதம்!

தீவுகள் பலவிதம்!

PUBLISHED ON : பிப் 15, 2025


Google News
Latest Tamil News
உலகில் வினோத தீவுகள் பல உள்ளன. அவை குறித்து பார்க்கலாம்...

ஒகினோஷிமா: யுனெஸ்கோ நிறுவனத்தின் பாரம்பரிய பாதுகாப்பு பட்டியலில் இடம் பெற்ற தீவு. கிழக்காசிய நாடான ஜப்பான் அருகே 270 ஏக்கர் பரப்பில் அழகுடன் காட்சி அளிக்கிறது. ஜப்பானியரால் புனித தீவாக கருதப்படுகிறது.

இங்கு, மூன்று பெண் கடவுள்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் விழா நடக்கும். அப்போது மட்டும் பெண்கள் செல்ல முடியும். மற்ற நாட்களில், ஷிண்டோ என்ற பூசாரி மட்டும் செல்ல அனுமதி உண்டு. ஆடையின்றி கடலில் குளித்த பின், கோவிலில் வழிபட வேண்டும். இதன் காரணமாகவே, பெண்கள் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை.

நல்ல தண்ணீர் தீவு: தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ளது. மக்கள் வசிக்காத மூன்று தீவுகளில் ஒன்று. எந்த இடத்தில் தோண்டினாலும், உப்பில்லாத நல்ல தண்ணீர் கிடைக்கும்.

ஹப் தீவு: அமெரிக்கா, நியூயார்க் மாநிலம் ேஹாண்டுராசில், 1,000 தீவுகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் இது. உலகிலேயே மிகச் சிறியது. 3,300 சதுர அடி பரப்பளவு உடையது. சைஸ்லேண்ட் குடும்பம் இதை, 1950ல் வாங்கியது. ஒரு வீடு, ஒரு மரம், புதர்கள் மற்றும் கடற்கரை மட்டுமே உள்ளது.

வெண்ணிலா தீவுகள்: தென்மேற்கு இந்தியப் பெருங்கடலில் கொமொரோஸ், மொரீஷியஸ், மடகாஸ்கர், லா ரீயூனியன், சீஷெல்ஸ், மாலத்தீவுகளை இணைத்து, சுற்றுலாவை மேம்படுத்த, 2010ல் இந்த பெயரிடப்பட்டது. இத்தீவுகளில் இருந்து வெண்ணிலா என்ற உணவுப் பொருள், ஏற்றுமதி செய்யப்படுவதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

- வ.முருகன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us