திருநெல்வேலி மாவட்டம், மானுார் ஒன்றியம், பார்வதியாபுரம், பரிசுத்த யோவான் நடுநிலைப் பள்ளியில், 1969ல், 7ம் வகுப்பு படித்த போது தலைமையாசிரியராக இருந்தார் அய்யாத்துரை தேவசகாயம். அது கடும் பஞ்சம் நிலவிய காலம். அனைவரையும் சமமாக பாவித்து சிறப்பாக நிர்வகித்தார்.
பள்ளியில், கிராமப்புற ஏழைகளே அதிகம் படித்தோம். அணிந்து செல்ல சரியான உடை இருக்காது. நைந்து கிழிந்தவற்றை உடுத்தியிருப்போம்.
மதிய உணவு திட்டத்திற்கு உணவு தானியங்கள் பெரிய துணிப்பைகளில் அனுப்பியது, கேர் என்ற நிறுவனம். ஏராளமாக குவிந்து கிடந்த அவற்றை கண்டதும், ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த முடிவு செய்தார் தலைமையாசிரியர். அவை பிரித்து உடைகளாக தைக்கப்பட்டன. தையல் பயிற்சி ஆசிரியைகள் குளோரி, எஸ்தர் வழியாக இது செயல்படுத்தப்பட்டது.
அதன்படி, தையல் கூலியாக, ஐந்து காசு மட்டும் கொடுத்து ஒரு கால் சட்டை வாங்க முடிந்தது. அதை அணிந்த போது, எந்த பொருளையும் வீணாக்க கூடாது என்ற கருத்து மனதில் ஆழமாக பதிந்தது.
எனக்கு, 66 வயதாகிறது; பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணி செய்து ஓய்வு பெற்றேன்.
பெரும் நெருக்கடி நிலவிய காலத்திலும், சீரிய முறையில் திட்டமிட்டு, கருணையுடன் உதவிய தலைமையாசிரியரை நன்றியுடன் நினைவில் பதித்துள்ளேன்.
- ரா.கணபதிராமன், திருநெல்வேலி.
தொடர்புக்கு: 94869 70459