Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பிளாட்டினம்!

பிளாட்டினம்!

பிளாட்டினம்!

பிளாட்டினம்!

PUBLISHED ON : ஜூன் 08, 2024


Google News
Latest Tamil News
உறுதியான உலோகம் பிளாட்டினம். வெப்ப சூழலிலும், மாசடையாமல் ஜொலிக்கும் தன்மை உடையது. தங்கத்தை கரைக்கும் பாதரசம், நைட்ரிக் அமிலம் மற்றும் அமிலங்களின் அரசனான கந்தக அமிலத்தால் கூட, பிளாட்டினத்தை அரிக்க முடியாது. எனவே தான், பிளாட்டினம் வேதி வினைகளை ஊக்குவிக்கும் பொருளாக பயன்படுகிறது.

இது, வெள்ளை தங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. எந்த வடிவத்திலும் எளிதாக வார்க்க முடியும். தென் ஆப்பிரிக்கா தான் உலகின் மிக கூடுதலான அளவில் பிளாட்டினம் உற்பத்தி செய்யும் நாடு. உலக உற்பத்தியில், 80 சதவீதம், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தது. அடுத்ததாக, ஆசிய, ஐரோப்பிய கண்டங்களை உள்ளடக்கிய ரஷ்யாவும், வட அமெரிக்க நாடான கனடாவும் இருக்கின்றன.

இது முன்னோடி சேர்மம். புகைப்பட கலையில் துத்தநாக அரிப்பை தடுக்க பயன்படுகிறது. அழியா மை தயாரிப்பு, கண்ணாடிக்கு முலாம் பூச்சு, பீங்கான்களுக்கு நிறமிடுவது என வினை ஊக்கியாக பயன்படுகிறது.

தங்கம் போல் இதை காரட் என்ற அலகால் அளவிடுவது இல்லை. இது, 95லிருந்து, 98 சதவீதம் துாய்மையாக உள்ளது. பல்லேடியம், ரோடியம் போன்ற உலோகங்களால் பலப்படுத்தப்படுகிறது. தங்கத்தை விட, ஐந்து மடங்கு விலை அதிகம்.

ஆபரணங்கள் தயாரிப்பு, ரசாயன ஆலைகள், மருத்துவம், ஏரோஸ்பேஸ் உள்ளிட்ட பல துறைகளில் பயன்படுகிறது.

- வி.பரணிதா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us